7th tamil model notes of lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
03-03-2025 முதல் 07-03-2025
2.பருவம்
3
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
மானுடம் வெல்லும் –
கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
மலைப்பொழிவு,
தன்னை அறிதல்
6.பக்கஎண்
46 - 50
7.கற்றல் விளைவுகள்
T-704 தாங்கள்
படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து
அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல், கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின்
மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.
T-714 படிக்கும்போது வகுப்புத் தோழர்கள் மற்றும் ஆசிரியர்கள்
உதவியுடன் பாடப்பொருள்களைப் புரிந்துகொள்வதுடன், அகராதிகள்,
வரைபடங்கள், பார்வை நூல்கள், இணையத்தளம் அல்லது பொருள்கள் ஆகியவற்றின் துணை கொண்டு பொருண்மையைத்
தெளிவாக அறிதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
பாடலின் பொருள்
அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.
அன்பு என்னும்
தலைப்பில் கவிதை எழுதுதல்.
9.நுண்திறன்கள்
அன்பு, அமைதி
குறித்து அறிதல்.
தனித்திறமையை
அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/2_68.html
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_95.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_84.html
https://tamilthugal.blogspot.com/2020/02/malaipozhivu.html
https://tamilthugal.blogspot.com/2021/02/3-3-malaipozhivu-7th-tamil-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-7th-tamil-mindmap-term-3-unit-3.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-7th-tamil-mindmap-term-3-unit-3_19.html
https://tamilthugal.blogspot.com/2021/03/3-3-thannai-arithal-kuruvina-7th-tamil.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த
பாடல்களைக் கூறச்செய்தல்.
கண்ணதாசன்
குறித்து அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
தன்னம்பிக்கை
பற்றிய கதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
மலைப்பொழிவு பாடல்
குறித்து விளக்குதல். இயேசு காவியம், கண்ணதாசன் குறித்த தகவல்களை மாணவர்களுடன்
பகிர்தல். அன்பு, அமைதி குறித்த நன்மைகள் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
தன்னை அறிதல் பாடலைக் கதையாக
விளக்குதல். மாணவர்களை அவர்களின் தனித்திறமை குறித்துக் கூறச் செய்தல். காகம்,
குயில் குறித்து மாணவர்களைப் பேசச் செய்தல். தன்னம்பிக்கையோடு வாழப் பழகுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அன்பு, அமைதி, தன்னம்பிக்கை குறித்துப் பேசுதல். புதிய
சொற்களுக்கு அகராதி மூலம் பொருள் அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி –கூடு கட்டத் தெரியாத பறவை
................................
ந.சி.வி – இந்த உலகம் யாருக்கு உரியது?
உ.சி.வி – உங்களிடம் உள்ள தனித்தன்மைகள் குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கு உரிய தனித்தன்மைகளை
எழுதுக.
கண்ணதாசன் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.