7th tamil model notes of lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
04-03-2024 முதல்
08-03-2024
2.பருவம்
3
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
மானுடம் வெல்லும் –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
கண்ணியமிகு தலைவர்
6.பக்கஎண்
51 – 54
7.கற்றல் விளைவுகள்
T-701 வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில்
கலந்துரையாடவும் செய்தல்.
8.கற்றல் நோக்கங்கள்
ஆளுமைகள் பற்றிய
விவரங்களைத் தொகுத்து வகைப்படுத்திப் பேசும் திறன் பெறுதல்.
நேர்மையைக்
கடமையாகக் கொண்ட தலைவர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி கலந்துரையாடுதல்.
9.நுண்திறன்கள்
கண்ணியமிகு தலைவர்
குறித்து அறிதல்.
உண்மை என்னும்
தலைப்பில் கவிதை எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_16.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-7th-tamil-mindmap-term-3-unit-3_27.html
https://tamilthugal.blogspot.com/2021/03/kanniyamigu-thalaivar-kuruvina.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த தலைவர்
பற்றிக் கூறச்செய்தல்.
நாட்டுப்பற்று
குறித்து அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
காயிதே மில்லத்
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
கண்ணியமிகு தலைவர்
குறித்து விளக்குதல். காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த
தகவல்களை மாணவர்களுடன் பகிர்தல். எளிமை, நேர்மை, நாட்டுப்பற்று, அரசியல்
பொறுப்புகள், கல்விப்பணிகள், தொழில்துறை பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
கண்ணியமிகு தலைவர் குறித்து
மாணவர்களைப் பேசச் செய்தல். தலைமைப் பண்போடு வாழப் பழகுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
எளிமை குறித்துப் பேசுதல். புதிய சொற்களுக்கு அகராதி மூலம்
பொருள் அறிதல். பிற தலைவர்களின் பண்புகளைப் பற்றிப் பேசுதல்.
15.மதிப்பீடு
LOT – காயிதே மில்லத் என்ற
அரபுச் சொல்லின் பொருள் ................................
MOT
– ஆட்சிமொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை எழுதுக.
HOT – நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் செய்யும் மக்கள் பணிகளை
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உங்களுக்குப் பிடித்த தலைவரின் தனித்தன்மைகளை எழுதுக.
காயிதே மில்லத் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.