6th tamil model notes of lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
04-03-2024 முதல் 08-03-2024
2.பருவம்
3
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
இன்னுயிர்
காப்போம் – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
மனிதநேயம்
6.பக்கஎண்
46 - 49
7.கற்றல் விளைவுகள்
T-620 பல இதழ்களுக்காகவும்
நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்.
உதவி செய்யும்
பண்பைப் பெறுதல்
9.நுண்திறன்கள்
மனிதநேயத்துடன்
வாழ்ந்தோரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_68.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3_27.html
https://tamilthugal.blogspot.com/2021/03/3-3-manithaneyam-6th-tamil-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2019/01/ramalinga-adikalar-vallalar.html
11.ஆயத்தப்படுத்துதல்
அன்னை தெரசா
குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
வள்ளலார் பற்றிக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
மனிதநேயம்
பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். வள்ளலார், அன்னை தெரசா, கைலாஷ்
சத்யார்த்தி குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இரக்க குணம் பற்றிக் கூறுதல்.
அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் நேசித்தல் பற்றிக் கூறி வாழ்வில்
கடைப்பிடிக்க உறுதி எடுத்தல்.
மனிதநேயம் குறித்து மாணவர்கள்
அறிந்த செய்திகளைக் கூறுதல். பொறுமை, இரக்கம், இன்சொல் பேசுதல் பற்றிய தகவல்களை
மாணவர்களுக்குக் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
மனிதநேயம் குறித்து விளக்குதல். பிறர்க்கென வாழும் பண்பை
வாழ்வில் கடைப்பிடிக்க முயலுதல்.
15.மதிப்பீடு
LOT – கைலாஷ் சத்யார்த்தி
தொடங்கிய இயக்கம் ..............................
MOT
– யாரால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது?
HOT – அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீங்கள் பிறருக்கு உதவி செய்த அனுபவத்தைக் கூறுங்கள்.
வள்ளலார் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.