8th tamil model notes of lesson
lesson plan November 17
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
17-11-2025 முதல் 21-11-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
5
4.பாடத்தலைப்பு
வையம்புகழ் வணிகம் – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
கொங்குநாட்டு வணிகம்
6.பக்கஎண்
97 – 101
கற்றல் விளைவுகள்
T-813. தேவைப்படின் பார்வை நூல்களாகிய
அகராதிகள், தேசப்படங்கள், கலைக்களஞ்சியம்
போன்றவற்றையும், இணையத்தளத்தையும் பொருத்தமான முறையில்
பயன்படுத்துதல், பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்.
8.கற்றல் நோக்கங்கள்
தொழில்களின் வகைகளை உணர்தல்.
9.நுண்திறன்கள்
மாணவர்கள் அறிந்த பலவிதமான தொழில்கள் குறித்து எழுதுதல்.
கொங்குநாட்டின் வணிகம் குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2025/11/8.html
https://tamilthugal.blogspot.com/2022/10/6-8th-tamil-mindmap-unit-6_31.html
https://tamilthugal.blogspot.com/2021/05/6-8th-tamil-konku-naattu-vanikam.html
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_20.html
11.ஆயத்தப்படுத்துதல்
வணிகம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
ஊர்களின் சிறப்புப் பெயர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
மாவட்டப் பெருமையை அறிமுகப்படுத்துதல்.
வணிகம் குறித்து அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
சேர நாட்டின்
எல்லைகள், கொங்கு மண்டலம், பழங்கால வணிகம், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல்,
ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் குறித்து விளக்குதல். மாணவர்கள் அறிந்த
வணிகம் குறித்துக் கூறச்செய்தல்.
ஊர்களின் சிறப்புப் பெயர்களை விளக்குதல். மாணவர்கள் அறிந்த
வணிகத்தின் நன்மைகளைக் கூறச்செய்தல். வணிகம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
வணிகத்தின் இன்றைய வளர்ச்சி குறித்துக் கூறுதல். வணிகத்தின்
அவசியம் குறித்துக் கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – சேரர்களின் தலைநகரம் ..............................
மாங்கனி நகரம் எனப்படுவது
.....................................
ந.சி.வி – கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?
கரூர் மாவட்டம் குறித்து எழுதுக.
உ.சி.வி – மக்களின் வளர்ச்சிக்கு வணிகம் தவிர உதவுபவைகளைப் பட்டியலிடுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உங்கள் மாவட்டம் குறித்த செய்திகளை எழுதுக.
பல்வேறு மாவட்டச் சிறப்புகளை இணையம் மூலம் அறிதல்.


