கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, November 06, 2021

ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 5.மரபுச்சொற்கள் seventh Tamil refresher course answer key 7th

 




மாணவர் செயல்பாடு

படத்திலுள்ள பறவை மற்றும் விலங்குகளின் ஒலிமரபுச் சொற்களை எழுதுக.

















பறவைகள்

ஆந்தை அலறும்

காகம் கரையும்

மயில் அகவும்

குயில் கூவும்

புறா குனுகும்

கிளி பேசும்

விலங்குகள்

யானை பிளிறும்

சிங்கம் முழங்கும்

குரங்கு அளப்பும்

புலி உறுமும்

குதிரை கனைக்கும்

நாய் குரைக்கும்

மதிப்பீட்டுச் செயல்பாடு

1. ஒலி மரபுச்சொல்லை வட்டமிடுக

அ. பால் பருகினான்

ஆ. மாவிலை

இ. சிலந்தி வலை

ஈ. காகம் கரையும்

2. பொருந்தாததைத் தெரிவு செய்க

அ. ஆடு கத்தும்

ஆ. பாம்பு சீறும்

இ. மயில் கொக்கரிக்கும்

ஈ. யானை பிளிறும்

3. தவறான ஒன்றைக் கண்டறிந்து வட்டமிடுக

அ. மா இலை

ஆ. தென்னை இலை

இ. பலா இலை

ஈ.வாழை இலை

4. சரியா? தவறா ? என எழுதுக.

அ. கூடை முடைந்தார் . _________ சரி

ஆ. சோறு தின்றான் . __________ தவறு

இ. மாத்திரை குடித்தான் . ________ தவறு

ஈ. பால் பருகினான் . __________ சரி

5. படங்களுக்குப் பொருத்தமான வினைமரபுச் சொற்களை எழுதுக.







பூப்பறித்தான் - பால் பருகினார்கள்






கூடை முடைந்தார் - ஆடை நெய்தார்






மாலை தொடுத்தாள் - ஓவியம் வரைந்தனர்

6. மரபுச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ. சிலந்தி வலை

எங்கள் வீட்டுக் கூரையில் சிலந்திவலை இருந்தது.

ஆ. கத்தரி நாற்று

எங்கள் தோட்டத்தில் கத்தரி நாற்று உள்ளது.

இ. பால் பருகினார்

தாத்தா காலையில் பால் பருகினார்.

ஈ. ஆடை நெய்தான்

மணிகண்டன் ஆடை நெய்தான்.

ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 4.நயம் பாராட்டல் seventh Tamil refresher course answer key 7th

 




மாணவர் செயல்பாடு

தோட்டம் நல்ல தோட்டம் - நம்மைச்

சொக்க வைக்கும் தோட்டம்

கூட்டமாக நாமும் - ஒன்றாய்க்

கூடி ஆடும் தோட்டம்

இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை , மோனை , இயைபுச் சொற்களைக் கண்டறிக.

எதுகை

தோட்டம் - தோட்டம்

தோட்டம் - கூட்டமாக

சொக்க - வைக்கும்

மோனை

தோட்டம் - தோட்டம்

கூட்டமாக - கூடி

இயைபு

தோட்டம் - தோட்டம்


மதிப்பீட்டுச் செயல்பாடு

1. பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் - தென்னை

நல்கிய குளிர் இளநீரும்

- இப்பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள எதுகையை எழுதுக.

எதுகை

னிமலர் - நனிபசு


2. தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள எதுகை , மோனை , இயைபு நயங்களை எடுத்து எழுதுக.

எதுகை

மிழுக்கும் - தமிழின்பத்

மோனை

மிழுக்கும் - மிழின்பத்

இயைபு

பேர் - நேர்


மதிப்பீட்டுச் செயல்பாடு – 3

பின்வரும் காப்பிய வரிகளைச் சரியான ஒலிப்புடன் படித்துக் காட்டுக.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ்

அங்கண் உலகு அளித்த லான்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலம் திரிதலான்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல் நின்று தான் சுரத்தலான்

-இளங்கோவடிகள்

ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 3.அகராதி பயன்படுத்தும் திறன் seventh Tamil refresher course answer key 7th


 



மதிப்பீட்டுச் செயல்பாடு

1. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. அப்பாவின் அப்பாவை தாத்தா என்று அழைப்போம்.

2. மாரியின் வேறுபெயர் மழை எனப்படும்.

3. நாம் பிறருக்கு இன்னல் தரக்கூடாது. - இவ்வாக்கியத்தில் 'இன்னல்' என்பதன் பொருள் துன்பம் ஆகும்.

2. பொருத்துக.

1. மாரி - ஆக்சிஜன்

2. தண்மை - வெப்பம்

3. உயிர்வளி - குளிர்ச்சி

4. வெம்மை - மழை

மாரி - மழை

தண்மை - குளிர்ச்சி

உயிர்வளி - ஆக்சிஜன்

வெம்மை - வெப்பம்

3. தேர்ந்தெடுத்து நிரப்புக.

1. வேறுபட்ட பொருள்தரும் சொல் ___________ .

அ) பிராணவாயு ஆ) நைட்ரஜன்

இ) உயிர்வளி ஈ) ஆக்சிஜன்

2. மரம் நடாவிட்டால் ___________.

அ) மாரி பொழியும் ஆ) பிராணவாயு கிடைக்கும்

இ) மண்ணரிப்பு தடுக்கப்படும் ஈ) உலகம் வெப்பமயமாகும்.

4. பொருள் அறிக.

1. பூட்டன் - பாட்டனுக்குத் தந்தை

2. விதைத்தல் - பரப்புதல்

3. உறவுகள் - சொந்தங்கள்

4. விளைவு - விளைபொருள்

5. கழை – மூங்கில்

6. பண்டம் – பொருள்

7. உவகை – மகிழ்ச்சி

8. வரை – மலை

9. எழினி – திரைச்சீலை

10. இன்னல் - துன்பம்

5. சொற்களை அகரவரிசைப்படுத்துக.

மனிதநேயம், தோரணம், வான்புகழ், சோலை, தொடுதிரை , பேரூராட்சி, தொழில்துறை, வெற்றி, சோம்பல், மேதை .

சோம்பல், சோலை, தொடுதிரை, தொழில்துறை, தோரணம், பேரூராட்சி, மனிதநேயம், மேதை, வான்புகழ், வெற்றி.

ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 2.சொற்றொடர் அமைப்பு முறை seventh Tamil refresher course answer key 7th


 



மதிப்பீட்டுச் செயல்பாடு

பத்தியைப் படித்து அதில் உள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்

சொற்களைக் கட்டங்களில் எடுத்து எழுதுக.

கோபால் காலையில் எழுந்தான் . காலைக் கடன்களை முடித்தான் . நண்பர்களுடன் பள்ளிக்குச் சென்றான் . வகுப்புத் தோழர்களுடன் கலந்துரையாடினான் . ஆசிரியர் நடத்திய பாடத்தைக் கவனித்தான் . ஆசிரியர் கேட்ட வினாக்களுக்கு விடையைக் கூறினான் . மதிய உணவு உண்டான் . மாலை வகுப்புகள் முடிந்து வீட்டிற்கு வந்தான் . சிறிதுநேரம் தன் நண்பர்களுடன் விளையாடினான் . வீட்டுப்பாடங்களைச் செய்துமுடித்தான் . இரவு உணவு உண்ட பின் உறங்கினான் .

எழுவாய்

கோபால், ஆசிரியர்

பயனிலை

எழுந்தான், முடித்தான், சென்றான், கலந்துரையாடினான், கவனித்தான், கூறினான், உண்டான், வந்தான், விளையாடினான், உறங்கினான்.

செயப்படுபொருள்

காலைக்கடன்களை, பாடத்தை, விடையை, மதியஉணவு, வீட்டுப்பாடங்களை

ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 1.மூவிடப்பெயர்கள் seventh Tamil refresher course answer key 7th

 





மதிப்பீட்டுச் செயல்பாடு

1. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

நான் கடைக்குச் சென்றேன்.

__________ கடைக்குச் சென்றோம். (நாங்கள் / யான் )

நாங்கள் 

2. இடப்பெயர்களின் வகைகளை வட்டமிடுக.

பெயரெச்சம், தன்மை , படர்க்கை , ஓடினான் , வினையெச்சம், முன்னிலை

பெயரெச்சம், தன்மை , படர்க்கை , ஓடினான் , வினையெச்சம், முன்னிலை

3. அடிக்கோடிட்ட சொல்லின் இடப்பெயரை எழுதுக.

நீங்கள் நேற்று கோயிலுக்குச் சென்றீர்களா?

முன்னிலை

4. கோடிட்ட இடத்தை நிரப்புக.

ராணி பள்ளிக்கு வந்தாள். அவள் தோழிகளுடன் விளையாடினாள்.

இத்தொடரில் அவள் என்பது ____________ இடத்தைக் குறிக்கிறது.

படர்க்கை 

5. ஒருமைக்கேற்ற பன்மையுடன் பொருத்துக.

அ. நான் - அவை

ஆ. நீ         - நாங்கள்

இ. அது     - நீங்கள்

நான் - நாங்கள்

நீ - நீங்கள்

அது - அவை 

6. பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களைப் பொருத்தமான கட்டத்தில் எழுதுக.

1. தாய் தந்தையரை நாம் மதித்து வாழவேண்டும்.

2. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

3. தாயே நீ அருள் புரிவாய்.

4. அவர்கள் சமாதானத்தின் முன்னோடிகள்.

5. அவர் சிறந்த பாடகர்.

6. அவள் நற்குணம் உடையவள்.

7. நீங்கள் பாட்டுப்பாடி ஆடுங்கள்.

8. நான் ஒரு சமாதானப் பிரியன்.

9. நீவிர் கடமையைச் சரியாக செய்வீர்கள்.

10. நீர் வீட்டிற்குச் சென்று மாலையில் என்ன செய்வீர்?

தன்மை

நாம், யாம், நான்

முன்னிலை

நீ, நீங்கள், நீவிர், நீர்

படர்க்கை

அவர்கள், அவர், அவள்

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 1,2,3,4 விடைக்குறிப்பு 6th Tamil Answer Key Refresher Course

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 1,2,3,4 sixth Tamil refresher course answer key pdf 6th

 பதிவிறக்கு/DOWNLOAD

Friday, November 05, 2021

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 16.கட்டுரை எழுதுதல் sixth Tamil refresher course answer key 6th

 





மதிப்பீட்டுச் செயல்பாடு

அ) ’கரிக்கோல் தன் வரலாறு கூறுதல் ‘ என்னும் கட்டுரையை நிறைவு செய்க.

முன்னுரை

நான் ஒரு கரிக்கோல்  என் கதையைப்

பற்றி இக்கட்டுரையில்  காண்போம்.

எனது பண்புகள்

நான் மரத்தால்  செய்யப்பட்டேன் .

மேலும் நான் பல வண்ணங்களில் இருப்பேன் .

குழந்தைகள் என்னை கூர்மையாக  செதுக்கிப்

பயன்படுத்துவார்கள்.

எனது பயன்கள்

நான் அழகாக எழுத ப் பயன்படுவேன் . பல

வடிவங்களில் ஓவியம் வரையவும்

பயன்படுவேன் . குழந்தைகளுக்கு என்னை

மிகவும் பிடிக்கும்.

முடிவுரை

நான் என் வாழ்நாளில் பிறருக்கு எப்போதும்

உதவியாக இருப்பேன் . என் தியாகத்தை உணர்ந்து நீங்களும் என்னைப் 

போல் பிறருக்கு உதவியாக வாழுங்கள்.

ஆ) நீங்களாக எழுதப் பயிற்சி செய்து பழகுங்கள்.

உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பழம் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

விரும்பினால் இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.

மாம்பழம் சுவை மிகுந்தது. முக்கனிகளுள் ஒன்று. செந்தூரம், மல்கோவா,

பங்கனப்பள்ளி எனப் பல மாம்பழவகைகள் தமிழ்நாட்டில் உள்ளன. 

மாம்பழத்தில் உயிர்ச்சத்து ஏ, பி அடங்கியுள்ளன. பழுத்த மாம்பழம் 

மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்களில் இருக்கும். மாம்பழத்திலிருந்து 

மாம்பழச்சாறு, குளிர்பானங்கள், மாம்பழப் பனிக்குழைவு போன்றவை 

செய்யப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் மாம்பழம்

மிகுதியாக விளைகின்றது. இந்திய அளவில் தமிழகம் அதிக மாம்பழ 

விளைச்சலைக் கொடுக்கிறது.

நான் விரும்பும் பழம் மாம்பழம்

முன்னுரை

    பழங்களில் மிகவும் சுவையானது மாம்பழம். முக்கனிகளுள் முதன்மையாக உள்ளது இம்மாம்பழமே.. நான் விரும்பும் மாம்பழம் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

வகைகள்

    செந்தூரம், மல்கோவா, பங்கனப்பள்ளி, கிளிமூக்கு, காசாலட்டு என்று பல வகைகளில் தமிழகத்தில் மாம்பழங்கள் கிடைக்கின்றன.

சத்தும் வண்ணமும்

    மாம்பழத்தில் உயிர்ச்சத்து ஏ, பி அடங்கியுள்ளன. பழுத்த மாம்பழம் 

மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்களில் இருக்கும். பழமாகும் முன் 

மாங்காய் பச்சை வண்ணத்தில் இருக்கும்.

கிடைக்கும் பொருள்கள்

    மாம்பழத்திலிருந்து மாம்பழச்சாறு, குளிர்பானங்கள், மாம்பழப் 

பனிக்குழைவு போன்றவை  செய்யப்படுகின்றன. 

முடிவுரை

     சேலம் மாவட்டத்தில் மாம்பழம் மிகுதியாக விளைகின்றது. இந்திய 

அளவில் தமிழகம் அதிக மாம்பழ  விளைச்சலைக் கொடுக்கிறது. நம்

 தேசியப் பழமாக இருக்கும் மாம்பழமே நான் விரும்பும் பழமாகும்.

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 15.கடிதம் எழுதுதல் sixth Tamil refresher course answer key 6th

 




மதிப்பீட்டுச் செயல்பாடு

1. உங்கள் ஊரில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சிக்கு உனது 

அத்தையை வரச்சொல்லி அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதுக.

                                                                                                                            7, காமராசர் தெரு,

                                                                                                                            மதுரை.

                                                                                                                             10/11/2021

அன்புள்ள அத்தைக்கு,

        நாங்கள் அனைவரும் நலம். அதுபோல உங்கள் அனைவரின்

நலம் அறிய ஆவல்.

    அடுத்தவாரம் எங்கள் ஊரில் புத்தகக் கண்காட்சி

நடைபெற உள்ளது. அதில் பல்வேறு புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

    நம் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு நூல்களை ஒரே

இடத்தில் கண்டு மகிழலாம். நம்முடன் இணைந்து கலந்துகொள்ள

கதிரையும், கோமதியையும் அழைத்து வாருங்கள். நாங்கள் அனைவரும் 

சேர்ந்து புத்தகக் கண்காட்சியைப் பார்த்து மகிழ்வோம். பல

புத்தகங்கள் வாங்கிப் பலரும் பயன் பெறுவோம். அனைவரும்

வாருங்கள்.

                                                                                                                        தங்கள் அன்புள்ள ,

                                                                                                                                ப.முத்து .

உறைமேல் முகவரி

    மு.நந்தினி ,

    11, குறிஞ்சி நகர் ,

    சிவகாசி.

    விருதுநகர் மாவட்டம் . 626123


2. உன் பிறந்தநாளுக்குப் பரிசு அனுப்பிய உன் மாமாவிற்கு நன்றி கூறிக் கடிதம் வரைக.

                                                                                                                        15, முகில் நகர்,

                                                                                                                         தூத்துக்குடி.

                                                                                                                         14/11/2021

 அன்புள்ள மாமாவிற்கு,

    நலம். நலமறிய ஆவல்.

            எனது பிறந்தநாள் பரிசாக நீங்கள் அனுப்பிய பரிசு கிடை த்தது.

மிக்க மகிழ்ச்சி . எனக்கு உரிய நேரத்தில் நீங்கள் வழங்கிய பரிசு மிகவும்

பயன் உள்ளதாக இருக்கும். நான் இதனை நல்ல முறையில்

பயன்படுத்துவேன் .

                                                                                                        நன்றி.

                                                                                                                        இப்படிக்கு,

                                                                                                                         ச.கதிரவன் .

உறைமேல் முகவரி

    சி.தமிழ்ச்செல்வம்,

    124, மல்லிகை வீதி ,

    அண்ணாநகர் ,

    மதுரை - 625020

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 14.இணைச்சொற்கள் sixth Tamil refresher course answer key 6th

 




மதிப்பீட்டுச் செயல்பாடு

அ) கீழ்க்காணும் தொடர்களில் பொருத்தமான இணைச் சொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.

(ஈடும்எடுப்புமாக, கண்ணுங்கருத்துமாக, அடுக்கடுக்காக, இன்பமும்துன்பமும்,கீரியும்பாம்பும்)

1. பானைகள் ______________________________ வைக்கப்பட்டிருந்தன.

அடுக்கடுக்காக

2. நேற்றுவரை ______________________________ போல் இருந்தவர்கள் இன்று

நட்புடன் பழகுகிறார்கள்.

கீரியும்பாம்பும்

3. தேர்வில் ______________________________ படித்ததால் நான் வகுப்பில்

முதலாவதாக வந்தேன் .

கண்ணுங்கருத்துமாக

4. வாழ்வில் ______________________________ வரும். ஆனால், அதனைக்

கண்டு சோர்வடையக்கூடாது.

இன்பமும்துன்பமும்

5. மன்ற விழாக்களில் எங்கள் ஆசிரியரின் பேச்சு

______________________________இருக்கும்.

ஈடும்எடுப்புமாக

ஆ) விடுபட்ட இடங்களில் உரிய எதிரிணைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

1. இன்பமும் துன்பமும் = இன்பமும்துன்பமும்

2. அன்றும் இன்றும் அன்றும்இன்றும்

3. அங்கும் இங்கும் = அங்கும்இங்கும்

4. உயர்வும் தாழ்வும் உயர்வும்தாழ்வும்

5. விண்ணும் மண்ணும் = விண்ணும்மண்ணும்

இ) கோடிட்டுப் பொருத்துக.












ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 13.உரையாடலை எழுதுதல் sixth Tamil refresher course answer key 6th

 





மதிப்பீட்டுச் செயல்பா டு:

அ) கோடிட்ட இடங்களை நிரப்பி உரையாடலை நிறைவு செய்க.

[துரித உணவு – விரைவு உணவு கெடுதலை பற்றித்

தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான உரையாடல்]

இளமாறன் : தாத்தா எனக்கு வயிறு மிகவும் வலிக்கிறது.

தாத்தா : இரு, இதோ வருகிறேன் வீட்டிற்குள் சென்று ஒரு

பாத்திரத்தில் மருந்து எடுத்து வருகிறார் . இளமாறா! இந்தா இதைச் 

சாப்பிடு ! வயிற்றுவலி சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.

இளமாறன் : தாத்தா இது என்ன ?

தாத்தா : வயிற்றுவலிக்காக நம் வீட்டில் இருக்கும் மருந்து, சரி நேற்று

இரவு நீ என்ன சாப்பிட்டாய்?

இளமாறன் : நேற்று நான் அப்பாவுடன் துரித உணவு கடைக்குச் சென்று

விரைவு உணவு சாப்பிட்டேன் .

தாத்தா : நான் நினைத்தது சரிதான் . அந்த விரைவு உணவுதான்

வயிற்று வலிக்குக் காரணம்.

இளமாறன் : ஏன் தாத்தா ! விரைவு உணவு கெடுதியா ?

தாத்தா : ஆம். விரைவு உணவில் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் 

மீண்டும் பயன்படுத்துதல்; அதிகக் காரமும் அவ்வுணவில்

சேர்க்கப்படும் சில செயற்கைச் சுவையூட்டிகள்

போன்றவையும்தான் நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும்.

இளமாறன் : வகுப்பில் ஆசிரியரும் இதைத் தான் கூறினார் .

தாத்தா : இனி மேல் விரைவு உணவு உண்ணாதே.

இளமாறன் : சரி தாத்தா .

ஆ. உரையாடலை நிறைவு செய்க.

(புவி வெப்பமடைதல் பற்றி நண்பர்கள் இருவருக்கு இடையிலான உரையாடல்)

கந்தன் மாலையில் பள்ளியிலிருந்து தாமதமாக வீடு

திரும்புகிறான் . வழியில் தனது நண்பன் சங்கரைச்

சந்திக்கிறான் ........

சங்கர் : என்ன கந்தா ! பள்ளியிலிருந்து இவ்வளவு

தாமதமாக வருகிறாய்?

கந்தன் : வெயில் அதிகமாக இருந்ததால்

பள்ளியிலுள்ள மரத்தடியில் அமர்ந்து

வீட்டுப்பாடம் எழுதிவிட்டு வருகிறேன் .

சங்கர் : ஆமாம். நீ சொல்வது உண்மைதான் .

நேற்று முனியாண்டி தாத்தா வெயில்

தாங்காமல் மயங்கி விழுந்துவிட்டார் .

கந்தன் : பூமி அதிக சூடாகி விட்டதுபோல.....

சங்கர் : ஆமாம். அதற்குப் பெயர்தான் புவி வெப்பமடைதல் என்று சொல்வார்கள்.

கந்தன் : அப்படியா அதை எப்படித் தடுப்பது?

சங்கர் குளிர்சாதனப்பெட்டி, குளிரூட்டி இவைகளின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். இவற்றால் புவி வெப்பமடைகிறது.

கந்தன் வேறு என்ன செய்யலாம்?

சங்கர் மரங்கள் வளர்க்கலாம், இயற்கையைக் காப்பதே புவியைக் காக்கும் ஒரே வழி.

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 12.படித்துப் பொருளுணர்தல் sixth Tamil refresher course answer key 6th

 





மதிப்பீட்டுச் செயல்பாடு

அ) பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடை எழுதுக.

தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய் மொழியாம் தமிழ்

காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். தமிழிலக்கணம்

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணக் கூறுகளைக் கொண்டு

திகழ்கிறது. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமே

உண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலடி உலகிற்கான உயர்ந்த

கருத்தை வெளிப்படுத்துகிறது. உலகிலுள்ள எல்லா ஊரும் நம்முடைய ஊரே . உலகில்

உள்ள எல்லா மக்களும் நம் உறவினர்களே ! என்பதுதான் அக்கருத்து.

1. தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?

இனிமை

2. “உறவினர்” என்னும் பொருள் தரும் சொல்லைப் பத்தியிலிருந்து எடுத்தெழுதுக.

கேளிர்

3. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.

4. தமிழிலக்கணம், புறநானூறு – சொற்களைப் பிரித்து எழுதுக.

தமிழ்+இலக்கணம்

புறம்+நானூறு

5. உலகிற்கான உயர்ந்த கருத்தை உணர்த்திய பாடலடியை எழுதுக.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

6. பத்தியில் உள்ள பெயர்ச்சொற்கள் ஐந்தினை எடுத்து எழுதுக

தமிழ்

இனிமை

ஊர்

அணி

வாழ்க்கை


ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 11.வினா உருவாக்குதல் sixth Tamil refresher course answer key 6th

 





மதிப்பீட்டுச் செயல்பாடு

அ ) பொருத்தமான வினாச்சொல்லை எடுத்து வினாத்தொடரை முழுமையாக்குக.

(யாது, யாவை , எங்கு, எது, எப்படி, என்ன, யார் , யாருடைய)

1. உன்னுடைய ஊரின் பெயர் ______________________ ?

என்ன

2. உனக்குப் பிடித்த வண்ணம் ______________________ ?

எது

3. நீ பள்ளிக்கு ______________________ வருகிறாய் ?

எப்படி

4. உன்னுடைய நண்பன் ______________________ ?

யார் 

5. கோடை விடுமுறைக்கு ______________________ ச் சென்றாய்?

எங்கு

6. மெய்ப்பொருள் என்பதன் பொருள் ______________________ ?

யாது

7. குறில் எழுத்துகள் ______________________ ?

யாவை 

8. சாருமதி ______________________ வீட்டிற்குச் சென்றாள் ?

யாருடைய

ஆ) படங்களுக்குப் பொருத்தமான வினாக்களை உருவாக்குக.











1. படத்திலுள்ள காயின் பெயர் என்ன?

2. முருங்கையின் பயன் 2 கூறுக.

3. முருங்கை மரம் தரும் 2 உணவுப்பொருள்களை எழுதுக.

4. படத்திலுள்ள கீரையின் பெயர் என்ன?

5. படத்திலுள்ள காய் உனக்குப் பிடிக்குமா?

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 10.மொழிபெயர்த்தல் sixth Tamil refresher course answer key 6th

 





மதிப்பீட்டுச் செயல்பாடு

அ) சரியான சொற்களுடன் இணைத்து மகிழ்வோமா ?




ஸ்கூல் - பள்ளிக்கூடம்
நோட்புக் - குறிப்பேடு
அசைன்மென்ட் - ஒப்படைப்பு
சைன் - கையொப்பம்
மார்க் - மதிப்பெண்

ஆ) கோடிட்ட இடங்களில் பொருத்தமான தமிழ்ச்சொற்களை எழுதுக.

1. நான் _______________ (ஆன்ட்டி) வீட்டிற்குச் செல்ல _______________ (பஸ்)
நிலையத்தில் நிற்கிறேன் .
அத்தை, பேருந்து
2. _______________ (மார்க்கெட்டில்) _______________ (ஆனியன்) மலிவாகக்
கிடைக்கின்றது.
சந்தை, வெங்காயம்
3. நான் _______________ (டீ) தான் கேட்டேன் . ஆனால், சூடான _______________
(மில்க்) கொடுத்தார் .
தேநீர், பால்
4. எனக்கு_______________ (டுமாரோ) பிறந்தநாள், அதனால் என் வீட்டிற்கு,
_______________ (பிரண்ட்ஸ்) வருவார்கள்.
நாளை, நண்பர்கள்
5. எனக்கு _______________, _______________ (கைட், டாய்ஸ்) கொண்டு
விளையாடுவது பிடிக்கும்.

பட்டம், பொம்மைகள்


இ) பின்வரும் படங்களின் பெயர்களைத் தமிழில் எழுதுக.











நாற்காலி, ஒலிவாங்கி, கணிப்பான்

குளிர்சாதனப்பெட்டி, சாலை, மகிழ்வுந்து

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 9.மயங்கொலிச் சொற்கள் sixth Tamil refresher course answer key 6th

 





மதிப்பீட்டுச் செயல்பாடு

1. விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை எழுதுக.

எ.கா. மடியைக் குறிப்பது குறங்கு

மரத்தில் தாவுவது குரங்கு

1. ஆற்றின் ஓரம் _______ கரை

ஆடையில் இருப்ப து _______ கறை

2. பரந்து இருப்பது _______ பரவை

பறந்து செல்வது _______ பறவை

3. மரத்தை அறுப்பது _______ அரம்

மனிதர் செய்வது _______ அறம்

4. சுவரில் அடிப்பது _______ ஆணி

மாதத்தில் ஒன்று _______ ஆனி


2. கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பார்த்து மயங்கொலிச் சொல்லை 

வட்டமிட்டு அதனை எடுத்து எழுதவும்.

“நிலா, நீ வரைந்த படம் மிகவும் அழகாக உள்ளது. வெண்பஞ்சு போன்ற 

மேகங்கள் சூழ்ந்த மலை ; அம்மலையிலிருந்து விழும் பாலாவி போன்ற அருவி; 

பசுமை மிகுந்த மரம், செடி, கொடிகள்; துள்ளித்திரியும் புள்ளிமான்கள்; 

சிறகடிக்கும் வண்ணப்பறவைகள்; மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் 

குட்டிக்குரங்குகள் அப்பப்பா ! நீ எப்படி இவ்வாறு வரையக்

கற்றுக் கொண்டாய்!”.

ல, ள, ழ

ந, ண, ன

ர, ற

அழகாக

வெண்பஞ்சு

மரம்

மலை

புள்ளிமான்கள்

குரங்குகள்

பாலாவி

வண்ணப் பறவைகள்

வண்ணப் பறவைகள்

புள்ளிமான்கள்

நிலா

மரக்கிளைகளில்


ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 8.நிறுத்தக்குறியிட்டு எழுதுதல் sixth Tamil refresher course answer key 6th

 





மதிப்பீட்டுச் செயல்பாடு:

1. நிறுத்தக் குறிகளுக்கு வண்ணமிட்டு அதன் பெயரை எழுதுக.

1.வினாக்குறி

2.முற்றுப்புள்ளி

3.உணர்ச்சிக்குறி

4.காற்புள்ளி


2. நிறுத்தக்குறிகளைப் பொருத்துக.

1 காற்புள்ளி - ,

2 வினாக்குறி - ?

3 உணர்ச்சிக்குறி - ! 

4 அரைப்புள்ளி - ;

5 முற்றுப்புள்ளி - .


3. பின்வரும் தொடர்களில் பொருத்தமான நிறுத்தக்குறிகளை இடுக; படித்து மகிழ்க.

1. பாஞ்சாலி சபதம் குயில் பாட்டு கண்ணன் பாட்டு ஆகிய 

முப்பெருங்காவியங்களைப் படைத்தார் பாரதியார்

பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு ஆகிய 

முப்பெருங்காவியங்களைப் படைத்தார் பாரதியார்.

2. ஆப்பிளைக் கண்டார் ஆற்றலைத் தந்தார்

வேடிக்கை பார்த்தார் வியக்க வைத்தார்

ஆவியைக் கண்டார் நீராவி இயந்திரம் தந்தார்

ஆப்பிளைக் கண்டார்; ஆற்றலைத் தந்தார்.

வேடிக்கை பார்த்தார்; வியக்க வைத்தார்.

ஆவியைக் கண்டார்; நீராவி இயந்திரம் தந்தார்.

3. கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது அதனைக்கட்டிய மன்னன் யார்

கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது ? அதனைக்கட்டிய மன்னன் யார்?

4. ஆ தவறிழைத்து விட்டேனே பிறர் சொல் கேட்டுப் பெரும்பிழை 

செய்தேனே யானோ அரசன் யானே கள்வன்

ஆ! தவறிழைத்து விட்டேனே! பிறர் சொல் கேட்டுப் பெரும்பிழை 

செய்தேனே! யானோ அரசன் ? யானே கள்வன்.

5. பணத்தை வைத்திருப்பவன் மட்டுமே பணக்காரன் அல்லன் சொன்ன 

சொல்லை மறவாது மற்றவர்க்குப் பெருந்தன்மையுடன் கொடுக்கும் 

உள்ளம் படைத்தவனே பணக்காரன் என்று அரசன் கூறினான்

"பணத்தை வைத்திருப்பவன் மட்டுமே பணக்காரன் அல்லன், சொன்ன 

சொல்லை மறவாது மற்றவர்க்குப் பெருந்தன்மையுடன் கொடுக்கும் 

உள்ளம் படைத்தவனே பணக்காரன்" என்று அரசன் கூறினான்.


ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 7.இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் sixth Tamil refresher course answer key 6th

 





மதிப்பீட்டுச் செயல்பாடு

அ. பொருத்தமான இரட்டைக் கிளவியைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(குடுகுடு, சலசல, மடமட, வெடவெட, விறுவிறு, படபட, டொக் டொக், குக்கூகுக்கூ)

1. பட்டாசு ________ வென வெடித்தது.

படபட

2. குழந்தை _______ வென ஓடியது.

குடுகுடு

3. தண்ணீர் _________ எனக் கொட்டியது.

மடமட

4. பெரியவர் ____________ வென்று நடந்தார் .

விறுவிறு

5. குயில் __________ என்று கூவியது.

குக்கூகுக்கூ

ஆ. பொருத்தமான அடுக்குத்தொடரால் நிரப்புக.

(வாழ்கவாழ்க, பாடிப்பாடி, சுவைக்கச்சுவைக்க , துள்ளித்துள்ளி, தோண்டத்தோண்ட )

1. மான் ______ _______ ஓடியது.

துள்ளித்துள்ளி

2. மணற்கேணியில் ______ _______ நீர் சுரக்கும்.

தோண்டத்தோண்ட

3. மணமக்களை _____ _____ என வாழ்த்தினார்கள்.

வாழ்கவாழ்க

4. கரும்பு, ____ _____ இனிப்பைத் தரும்.

சுவைக்கச்சுவைக்க 

5. குழந்தைகள் ______ _____மகிழ்ந்தனர்.

பாடிப்பாடி

இ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. தலைவரை _____ ______ என வரவேற்றனர்.

வருகவருக

2. நூல்களை _______ _______ அறிவு வளரும்.

படிக்கப்படிக்க

3. மாணவர்கள் ______ _______ பேசினர்.

மீண்டும்மீண்டும்

4. புதர் வழியே சென்ற மக்கள் _____ _____ என அலறினர்.

பாம்புபாம்பு

5. குடிசை எரிந்ததைக் கண்ட மக்கள் ______ ______ எனப் பதறினர்.

தீதீ

6. அழகி __________ எனச் சிரித்தாள்.

கலகல

7. பாட்டி குளிரால் __________ என நடுங்கினார் .

வெடவெட

8. வைரம் ________ என மின்னியது.

பளபள

9. மழை _________ எனப் பெய்தது.

சடசட

10. கதவை __________ எனத் தட்டினான் .

டொக்டொக்

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 6.எழுதுகல் திறன் பெறுதல் sixth Tamil refresher course answer key 6th

 







மதிப்பீட்டுச் செயல்பாடு

உரைப்பகுதிகளைப் பார்த்து எழுதுக.

குகன் என்ற விவசாயி கூழையூரில் வாழ்ந்து வந்தார் . 
அவர் தம் மகன் சூரியோடு ஊரில் நடைபெற்ற தேர்த் திருவிழாவிற்குச் சென்றார் . 
அங்கு முறுக்கு, பலூன், நூல்விசிறி போன்றவற்றை வாங்கி மகிழ்ந்தான் சூரி. 
வழிபாட்டிற்குத் தேவையான பூக்கள், பழங்கள், வெற்றிலை பாக்கு போன்றவற்றை வாங்கினார் குகன். 
தனக்குக் கிடைத்த குறைந்த வருமானத்தில் வழிபாட்டிற்குத் தேவையான புதுத்துணிகளையும் வாங்கினார் . 
மண்வளம் பெருக, விவசாயம் செழிக்க கடவுளை வேண்டினார் .


கோடை விடுமுறை முடிந்தது. 
பள்ளியின் முதல் நாள். 
மாணவர்கள் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வந்தார்கள். 
மணி ஒலித்தது. 
ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார் . 
மாணவர்கள்
எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொன்னா ர்கள். 
ஆசிரியர், முதலில் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார் . 
மாணவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

தமிழ்த்துகள்

Blog Archive