மாணவர் செயல்பாடு
தோட்டம் நல்ல தோட்டம் - நம்மைச்
சொக்க வைக்கும் தோட்டம்
கூட்டமாக நாமும் - ஒன்றாய்க்
கூடி ஆடும் தோட்டம்
இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை , மோனை , இயைபுச் சொற்களைக் கண்டறிக.
எதுகை
தோட்டம் - தோட்டம்
தோட்டம் - கூட்டமாக
சொக்க - வைக்கும்
மோனை
தோட்டம் - தோட்டம்
கூட்டமாக - கூடி
இயைபு
தோட்டம் - தோட்டம்
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிர் இளநீரும்
- இப்பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள எதுகையை எழுதுக.
எதுகை
பனிமலர் - நனிபசு
2. தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !
இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள எதுகை , மோனை , இயைபு நயங்களை எடுத்து எழுதுக.
எதுகை
தமிழுக்கும் - தமிழின்பத்
மோனை
தமிழுக்கும் - தமிழின்பத்
இயைபு
பேர் - நேர்
மதிப்பீட்டுச் செயல்பாடு – 3
பின்வரும் காப்பிய வரிகளைச் சரியான ஒலிப்புடன் படித்துக் காட்டுக.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ்
அங்கண் உலகு அளித்த லான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல் நின்று தான் சுரத்தலான்
-இளங்கோவடிகள்