மதிப்பீட்டுச் செயல்பாடு
உரைப்பகுதிகளைப் பார்த்து எழுதுக.
குகன் என்ற விவசாயி கூழையூரில் வாழ்ந்து வந்தார் .
அவர் தம் மகன் சூரியோடு ஊரில் நடைபெற்ற தேர்த் திருவிழாவிற்குச் சென்றார் .
அங்கு முறுக்கு, பலூன், நூல்விசிறி போன்றவற்றை வாங்கி மகிழ்ந்தான் சூரி.
வழிபாட்டிற்குத் தேவையான பூக்கள், பழங்கள், வெற்றிலை பாக்கு போன்றவற்றை வாங்கினார் குகன்.
தனக்குக் கிடைத்த குறைந்த வருமானத்தில் வழிபாட்டிற்குத் தேவையான புதுத்துணிகளையும் வாங்கினார் .
மண்வளம் பெருக, விவசாயம் செழிக்க கடவுளை வேண்டினார் .
கோடை விடுமுறை முடிந்தது.
பள்ளியின் முதல் நாள்.
மாணவர்கள் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வந்தார்கள்.
மணி ஒலித்தது.
ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார் .
மாணவர்கள்
எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொன்னா ர்கள்.
ஆசிரியர், முதலில் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார் .
மாணவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.