கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, November 06, 2021

ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 3.அகராதி பயன்படுத்தும் திறன் seventh Tamil refresher course answer key 7th


 



மதிப்பீட்டுச் செயல்பாடு

1. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. அப்பாவின் அப்பாவை தாத்தா என்று அழைப்போம்.

2. மாரியின் வேறுபெயர் மழை எனப்படும்.

3. நாம் பிறருக்கு இன்னல் தரக்கூடாது. - இவ்வாக்கியத்தில் 'இன்னல்' என்பதன் பொருள் துன்பம் ஆகும்.

2. பொருத்துக.

1. மாரி - ஆக்சிஜன்

2. தண்மை - வெப்பம்

3. உயிர்வளி - குளிர்ச்சி

4. வெம்மை - மழை

மாரி - மழை

தண்மை - குளிர்ச்சி

உயிர்வளி - ஆக்சிஜன்

வெம்மை - வெப்பம்

3. தேர்ந்தெடுத்து நிரப்புக.

1. வேறுபட்ட பொருள்தரும் சொல் ___________ .

அ) பிராணவாயு ஆ) நைட்ரஜன்

இ) உயிர்வளி ஈ) ஆக்சிஜன்

2. மரம் நடாவிட்டால் ___________.

அ) மாரி பொழியும் ஆ) பிராணவாயு கிடைக்கும்

இ) மண்ணரிப்பு தடுக்கப்படும் ஈ) உலகம் வெப்பமயமாகும்.

4. பொருள் அறிக.

1. பூட்டன் - பாட்டனுக்குத் தந்தை

2. விதைத்தல் - பரப்புதல்

3. உறவுகள் - சொந்தங்கள்

4. விளைவு - விளைபொருள்

5. கழை – மூங்கில்

6. பண்டம் – பொருள்

7. உவகை – மகிழ்ச்சி

8. வரை – மலை

9. எழினி – திரைச்சீலை

10. இன்னல் - துன்பம்

5. சொற்களை அகரவரிசைப்படுத்துக.

மனிதநேயம், தோரணம், வான்புகழ், சோலை, தொடுதிரை , பேரூராட்சி, தொழில்துறை, வெற்றி, சோம்பல், மேதை .

சோம்பல், சோலை, தொடுதிரை, தொழில்துறை, தோரணம், பேரூராட்சி, மனிதநேயம், மேதை, வான்புகழ், வெற்றி.

தமிழ்த்துகள்

Blog Archive