மாணவர் செயல்பாடு
படத்திலுள்ள பறவை மற்றும் விலங்குகளின் ஒலிமரபுச் சொற்களை எழுதுக.
பறவைகள்
ஆந்தை அலறும்
காகம் கரையும்
மயில் அகவும்
குயில் கூவும்
புறா குனுகும்
கிளி பேசும்
விலங்குகள்
யானை பிளிறும்
சிங்கம் முழங்கும்
குரங்கு அளப்பும்
புலி உறுமும்
குதிரை கனைக்கும்
நாய் குரைக்கும்
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. ஒலி மரபுச்சொல்லை வட்டமிடுக
அ. பால் பருகினான்
ஆ. மாவிலை
இ. சிலந்தி வலை
ஈ. காகம் கரையும்
2. பொருந்தாததைத் தெரிவு செய்க
அ. ஆடு கத்தும்
ஆ. பாம்பு சீறும்
இ. மயில் கொக்கரிக்கும்
ஈ. யானை பிளிறும்
3. தவறான ஒன்றைக் கண்டறிந்து வட்டமிடுக
அ. மா இலை
ஆ. தென்னை இலை
இ. பலா இலை
ஈ.வாழை இலை
4. சரியா? தவறா ? என எழுதுக.
அ. கூடை முடைந்தார் . _________ சரி
ஆ. சோறு தின்றான் . __________ தவறு
இ. மாத்திரை குடித்தான் . ________ தவறு
ஈ. பால் பருகினான் . __________ சரி
5. படங்களுக்குப் பொருத்தமான வினைமரபுச் சொற்களை எழுதுக.
பூப்பறித்தான் - பால் பருகினார்கள்
கூடை முடைந்தார் - ஆடை நெய்தார்
மாலை தொடுத்தாள் - ஓவியம் வரைந்தனர்
6. மரபுச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
அ. சிலந்தி வலை
எங்கள் வீட்டுக் கூரையில் சிலந்திவலை இருந்தது.
ஆ. கத்தரி நாற்று
எங்கள் தோட்டத்தில் கத்தரி நாற்று உள்ளது.
இ. பால் பருகினார்
தாத்தா காலையில் பால் பருகினார்.
ஈ. ஆடை நெய்தான்
மணிகண்டன் ஆடை நெய்தான்.