மதிப்பீட்டுச் செயல்பாடு
பத்தியைப் படித்து அதில் உள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்
சொற்களைக் கட்டங்களில் எடுத்து எழுதுக.
கோபால் காலையில் எழுந்தான் . காலைக் கடன்களை முடித்தான் . நண்பர்களுடன் பள்ளிக்குச் சென்றான் . வகுப்புத் தோழர்களுடன் கலந்துரையாடினான் . ஆசிரியர் நடத்திய பாடத்தைக் கவனித்தான் . ஆசிரியர் கேட்ட வினாக்களுக்கு விடையைக் கூறினான் . மதிய உணவு உண்டான் . மாலை வகுப்புகள் முடிந்து வீட்டிற்கு வந்தான் . சிறிதுநேரம் தன் நண்பர்களுடன் விளையாடினான் . வீட்டுப்பாடங்களைச் செய்துமுடித்தான் . இரவு உணவு உண்ட பின் உறங்கினான் .
எழுவாய்
கோபால், ஆசிரியர்
பயனிலை
எழுந்தான், முடித்தான், சென்றான், கலந்துரையாடினான், கவனித்தான், கூறினான், உண்டான், வந்தான், விளையாடினான், உறங்கினான்.
செயப்படுபொருள்
காலைக்கடன்களை, பாடத்தை, விடையை, மதியஉணவு, வீட்டுப்பாடங்களை