மதிப்பீட்டுச் செயல்பாடு
1. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
நான் கடைக்குச் சென்றேன்.
__________ கடைக்குச் சென்றோம். (நாங்கள் / யான் )
நாங்கள்
2. இடப்பெயர்களின் வகைகளை வட்டமிடுக.
பெயரெச்சம், தன்மை , படர்க்கை , ஓடினான் , வினையெச்சம், முன்னிலை
பெயரெச்சம், தன்மை , படர்க்கை , ஓடினான் , வினையெச்சம், முன்னிலை
3. அடிக்கோடிட்ட சொல்லின் இடப்பெயரை எழுதுக.
நீங்கள் நேற்று கோயிலுக்குச் சென்றீர்களா?
முன்னிலை
4. கோடிட்ட இடத்தை நிரப்புக.
ராணி பள்ளிக்கு வந்தாள். அவள் தோழிகளுடன் விளையாடினாள்.
இத்தொடரில் அவள் என்பது ____________ இடத்தைக் குறிக்கிறது.
படர்க்கை
5. ஒருமைக்கேற்ற பன்மையுடன் பொருத்துக.
அ. நான் - அவை
ஆ. நீ - நாங்கள்
இ. அது - நீங்கள்
நான் - நாங்கள்
நீ - நீங்கள்
அது - அவை
6. பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களைப் பொருத்தமான கட்டத்தில் எழுதுக.
1. தாய் தந்தையரை நாம் மதித்து வாழவேண்டும்.
2. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
3. தாயே நீ அருள் புரிவாய்.
4. அவர்கள் சமாதானத்தின் முன்னோடிகள்.
5. அவர் சிறந்த பாடகர்.
6. அவள் நற்குணம் உடையவள்.
7. நீங்கள் பாட்டுப்பாடி ஆடுங்கள்.
8. நான் ஒரு சமாதானப் பிரியன்.
9. நீவிர் கடமையைச் சரியாக செய்வீர்கள்.
10. நீர் வீட்டிற்குச் சென்று மாலையில் என்ன செய்வீர்?
தன்மை
நாம், யாம், நான்
முன்னிலை
நீ, நீங்கள், நீவிர், நீர்
படர்க்கை
அவர்கள், அவர், அவள்