கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, March 06, 2021

அமைதி - குட்டிக்கதை amaithi kutty kathai tamil short story

பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். 

அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், 
தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன. 

தேங்காய் பேச ஆரம்பித்தது: 

”நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட..!!!” என்றது 

அடுத்து வாழைப்பழம்,

”நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டது. 

கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது. 

பக்தன் கருவறையை அடைந்தான். 

தேங்காய் உடைபட்டது. 

பழத்தோல் உரிக்கப்பட்டது. 

கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. 

பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் 

நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். 

இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம், 

ஆனால் 

கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால் 

இருக்கும் வரை ஓளிவீசி 

இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

தமிழ்த்துகள்

Blog Archive