கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, March 04, 2021

சந்தேகம் - குட்டிக்கதை santhegam kutty kathai tamil short story

இந்த மாதம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு கேட்டான் மகன் எழிலன்.

“அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா. கவலைப்படாதே!’ குதர்க்கமாய்ப் பதில் சொன்னாள் கனிமொழி, என் மனைவி.

அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. 
“எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ கனிமொழியின் யூகம் சரிதான். 
அண்ணன்தான் அழைத்தார்.

“வணக்கம்ண்ணே, கோபுதான் பேசுறேன்… சொல்லுங்க’ என்றேன்.
“என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். 
அவரைச் சொல்லியும் குற்றமில்லை.
அண்ணி தொந்தரவு
செய்திருப்பாள்.

“கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். 
புறப்பட ஆயத்தமானேன்.

“அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் எழிலன். 
“என்னடா சந்தேகம்?’ 
“தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைகள்…

தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… 
உனக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு வயசாய்ட்டா ஒரு மாதம் நான் வச்சுக்குவேன்…. 
அடுத்த மாதம் நீ எங்கே போவ?

தமிழ்த்துகள்

Blog Archive