மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
“தூறல்” –
பசும்புல்_மட்டுமே_நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.
“சாரல்” –
தரைக்குள்_ஓரளவு_நீர்_செல்லும்.
“மழை” –
ஓடையில்நீர்ப்பெருக்கு_இருக்கும்.
” பெருமழை” –
நீர்நிலைகள்நிரம்பும்.
” அடைமழை” –
ஐப்பசியில்பெய்வது.
” கனமழை” –
கார்த்திகையில்பெய்வது.
அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:
மழைத்துளியின் விட்டம்
0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.
அதுவே விட்டம்
0.5 மி.மீட்டருக்கு மேல்
இருந்தால் அது மழை.
4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.
உழவு மழை :
‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் உழவு மழை என சொல்வது உண்டு.
பூமியில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது உழவு மழை.
ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.