கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, May 06, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு மே – 2022 உத்தேச விடைக்குறிப்பு Tenth tamil public exam tentative answer key May 2022

 

பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு மே – 2022

உத்தேச விடைக்குறிப்பு

பகுதி 1                                                                    15 மதிப்பெண்கள்

 1.ஆ.மணிவகை

2.ஆ.கொளல் வினா

3.அ.காடு

4.ஈ.சிலப்பதிகாரம்

5.ஆ.பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

6.இ.தொடர்மொழி

7.ஈ.காற்றின் பாடல்

8.அ.புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்படுபவை

9.ஆ.வேற்றுமை உருபு

10.ஈ.சிலப்பதிகாரம்

11.ஈ.கால் உடை – காலால் உடைத்தல்

12.இ.எம்+தமிழ்+நா

13.அ.பண்புத்தொகை

14.ஆ.தமிழ்மொழியை

15.இ.வேற்றுமொழியினர்

 

பகுதி 2                            8 மதிப்பெண்கள்

எவையேனும் 4

21 கட்டாயம்


பிரிவு 1

 

16. உரைநடையும், கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்

 

17. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

அ.சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலம் இலக்கிய அறிவு பெற்றவர் யார்?

 

அல்லது

 

எதன் மூலமாக ம.பொ.சி. இலக்கிய அறிவு  பெற்றார்?

 

அல்லது

 

சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலம் ம.பொ.சி. எந்த அறிவு பெற்றார்?

 

ஆ.எந்த ஆண்டு வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்?

 

அல்லது

 

1906 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் யார்?

 

அல்லது

 

1906 ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் யாருக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்?

 

அல்லது

 

1906 ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எந்த நிறுவனத்தைத் தொடங்கினார்?

 

18. அறம் கூறும் மன்றங்களே அவையம் எனப்பட்டது .

இவை, அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.

'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்று புறநானூறு கூறுகிறது.

உறையூரிலிருந்த அற அவையும் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. 

அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.

 

19.சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

 

20.எவையேனும் 4 மட்டும்

நாற்று, கன்று, குருத்து, பிள்ளை, குட்டி, மடலி, வடலி, பைங்கூழ்.

 

21. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

 

பிரிவு 2                             10 மதிப்பெண்கள்

 எவையேனும் 5


22. இன்சொல் - பண்புத்தொகை

இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு.

 

எழுகதிர் - வினைத்தொகை

நேற்று எழுந்த கதிர் இன்று எழுகின்ற கதிர் நாளை எழும்கதிர் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது.

 

23. வாழ்க

வாழ்+

வாழ் – பகுதி

க – வியங்கோள் வினைமுற்று விகுதி

 

24.பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

25.வெண்பா – செப்பலோசை

ஆசிரியப்பா – அகவலோசை

 

26.அ. நம்பிக்கை

ஆ. மெய்யியலாளர்

 

27. ஆரல்வாய்மொழிக்குச் “செல்வேன்” என்று எதிர்காலத்தில் தான் வரவேண்டும்.

ஆனால் செல்வதன் உறுதித்தன்மை காரணமாக “செல்கிறேன்” என்று நிகழ்காலத்தில் வந்துள்ளதால், இது காலவழுமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.

 

28. “தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை

தேரும் சிலப்பதி காரமதை                                      

       ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்

ஓதி யுணர்ந்தின் புறுவோமே”

 

பகுதி 3                                6 மதிப்பெண்கள்

 எவையேனும் 2

பிரிவு 1

 

29. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

எவையேனும் 3 மட்டும்.  

நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.

தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்.

மாங்கன்று தளிர்விட்டது.

வாழைக்கன்று மழையின்றி வாடியது.

பூச்செடியின் கீழே சாண உரம் இட்டேன்.

 

30.அ. அறம் கூறும் மன்றங்கள்

ஆ. 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்'

இ. துலாக்கோல் போல நடுநிலை மிக்கது

 

31. ம.பொ.சி.யிடம் நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாததால், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, குறைந்த விலைக்குப் புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டார்.

மேலும், உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டுப் பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.

இவற்றால், வறுமையிலும் படிப்பின்மீது ம.பொ.சி கொண்ட நாட்டத்தை அறியலாம்.

 

பிரிவு 2                    மதிப்பெண்கள்

 எவையேனும் 2

 

32.கம்பர் இராமனது வரலாற்றாத் தமிழில் வழங்கி இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.

இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.

இது ஆறு காண்டங்களை உடையது.

கம்பராமாயணப்பாடல்கள் சந்தநயம் மிக்கவை.

 

33. பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி.

கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாண்ட மண்ணுலகப் பேரரசு.

தென்னவனாம் பாண்டிய மன்னனின் மகள்.

உலகப்பொதுமறையாம் திருக்குறளின் பெரும் பெருமை.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என விரிந்தமை.

நிலைத்த சிலப்பதிகாரமாய், அழகிய மணிமேகலையாய்ச் சிறப்புப் பெற்று விளங்குவது.

 

34. அ. அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

 

அல்லது

 

ஆ. நவமணி வடக்க யில்போல்

          நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

          தன்னிசைக்கு இசைகள் பாடத் 

துவமணி மரங்கள் தோறும்

          துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

          ஒலித்து அழுவ போன்றே.

 

பிரிவு 3                            மதிப்பெண்கள்

 எவையேனும் 2

 

35.

தொடர்

வகை

விரிவு

பூங்கொடி

உவமைத்தொகை

பூப்போன்ற கொடி

பூப்பறித்த

இரண்டாம் வேற்றுமைத்தொகை

பூ(ஐ)வைப் பறித்த

பூப்பறித்த பூங்கொடி

அன்மொழித்தொகை

பூவைப்பறித்த(பெண்)பூங்கொடி

தண்ணீர்த்தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கதொகை

தண்ணீரை உடைய தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர்

சுவர்க்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கதொகை

சுவரின் கண் உள்ள கடிகாரம்

ஆடுமாடுகள்

உம்மைத்தொகை

ஆடுகளும் மாடுகளும்

மல்லிகைப்பூ

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

மல்லிகை-சிறப்பு

பூ-பொதுப்பெயர்

மணிபார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத்தொகை

மணியைப் பார்த்தாள்

 

36. தீவகம் + அணி                   தீவகம் = விளக்கு

ஒரு அறையில் ஒரு இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் செய்யுளின் பல இடங்களுக்குச் சென்று பொருந்தி பொருளை விளக்குவது தீவக அணி எனப்படும்.

எ.கா-         

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள், இழிகுருதி- பாய்ந்து

திசை அனைத்தும், வீரச்சிலைபொழிந்த அம்பும்,

மிசை அனைத்தும் புள் குலமும் வீழ்ந்து.

பாடலின் பொருள்-

அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன. அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன. குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன. வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகளும் சிவந்தன. குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.              

விளக்கம்-  

இப்பாடலில்  சேந்தன (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள்,அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்துடன் பொருந்தி பொருள் தருவதால் இப்பாடல் தீவக அணி.

 

தீவக அணி மூன்று வகைப்படும். அவை

முதல் நிலைத் தீவகம்

இடைநிலைத் தீவகம்

கடைநிலைத் தீவகம்

 

37.

கரு-வியும்             நிரை நிரை            கருவிளம்

கா-லமும்              நேர் நிரை              கூவிளம்

செய்-கை-யும்                 நேர் நேர் நேர்                   தேமாங்காய்

செய்-யும்               நேர் நேர்                தேமா

அரு-வினை-யும்  நிரை நிரை நேர்     கருவிளங்காய்

மாண்-ட                நேர் நேர்                தேமா

தமைச்-சு              நிரைபு                             பிறப்பு

 

பகுதி 4                                25 மதிப்பெண்கள்


38.அ. வீரமாமுனிவரின் கவிதாஞ்சலி

அருளப்பரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ஆவார்.

வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டு, தாய் எலிசபெத் மறைந்தபோது அவர்தம் பாடுகளைத் தன் கவிதைகளால் ஒப்பனை செய்துள்ளார்.

பூக்கையைக் குவித்து, வாய்மையே மழைநீராகி, தூவும் துளியலது இளங்கூழ் வாடிக் காய்மணியாகு முன்னர்க் காய்ந்ததென, விரிந்தன கொம்பில் கொய்த வீயென உள்ளம் வாட, எரிந்தன நுதி நச்சு அம்புண்டு இரும்புழைப் புண்போல், பிரிந்தன புள்ளின் கானில் என்று உவமையும் உருவகமும் பின்னிப்பிணையத் தொடுத்து உருகியிருக்கிறார் வீரமாமுனிவர்.

அதோடு தவமணி மார்பன்சொன்ன இப்புலம்பல் கேட்டு தேன்மலர்கள் பூத்த மரங்கள்தோறும் உள்ள மலர்களும், சுனைதோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன என்பது கவிதாஞ்சலியின் உச்சம் என்றே கூறவேண்டும்.

 அல்லது

ஆ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

39. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

அ. தலைப்பு

முகவரி, நாள்

விளி

பொருள்

இப்படிக்கு

உறைமேல்முகவரி

 அல்லது

ஆ. தலைப்பு

அனுப்புநர்

பெறுநர்

விளி

பொருள்

இப்படிக்கு

இடம், நாள்

உறைமேல் முகவரி

 

40. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

41. பொருத்தமாக நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

42.அ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 அல்லது

ஆ. பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து பிரகாசமான கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.

 

பகுதி 5                24 மதிப்பெண்கள்

 

43. அ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்

 

அறத்தில் வணிக நோக்கம் இல்லாமை, அரசியல் அறம், அறங்கூறவையம், போர்அறம், பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகப்பார்த்தல், பசிப்பிணி மருத்துவம், வாய்மையே சிறந்த அறம்

மேற்கண்டவற்றை தமிழர் போற்றி வளர்த்த அறங்களாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

இன்றைக்கும் தேவையே –  

இப்பிறப்பில் அறம் செய்தால் மறு பிறப்பில் அதன் பயனைப் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது என்று புறநானூற்றில் முடமோசியார் கூறுகிறார். பிறரிடம் அன்பைப்பெற, ஆதரவைப்பெற, புகழ்ச்சியைப்பெற, கடவுளிடம் அருளைப்பெற என்று எண்ணிச் செய்வது அறமாகாது.

அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது. இவை இன்றைய நீதி மன்றங்களுக்கு ஒப்பானவை.

புறமுதுகிடுவோர், சிறார், முதியோர், பெண்டிர், நோயாளர் போன்றோருக்குப் போரின்போது ஊறு செய்யக்கூடாது.

இந்நிலை மறந்து இன்று மனித இனம் அணுஆயுதம் ஏந்தி நிற்கிறது.

இது அறம் அன்று.

செல்வத்துப்பயனே ஈதல்.

எனவே பெருங்கொடையாளர்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி வருகின்றனர்.

பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுகிறோம்.

இவ்விரக்க உணர்வு இருந்தால் மனிதநேயம் மலரும், பகை மாயும்.

பிழையறியா நன்மொழி என்கிறது நற்றிணை.

வாய்மையே வெல்லும் என்ற சொல்லை நம் அரசு சின்னத்தில் வைத்துள்ளது.

வாய்மையே சிறந்த அறம்.

 அல்லது

ஆ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகள்

 

காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது தமிழ்.

தமிழின் சொல்வளம் போல் வேறு எம்மொழியிலும் இல்லை.

தாவரத்தின் அடி வகை – தாள், தண்டு, கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி.

கிளைப்பிரிவுகள்    – கவை, கொம்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு.

காய்ந்த அடி, கிளை          – சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை.

இலை வகை                   – இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு.

கொழுந்து வகை    – துளிர், முறி, குருத்து, கொழுந்தாடை.                    

பூ                          – அரும்பு, போது, மலர், வீ, செம்மல்.

பிஞ்சு வகை                    – பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூசு, கவ்வை, குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல்.

குலை வகை                   – கொத்து, குலை, தாறு, கதிர், அலகு, சீப்பு.    

கெட்டுப்போன காய் வகை          – சூம்பல், சிவியல், சொத்தை, வெம்பல், அளியல், அழுகல், சொண்டு.    

பழத்தோல் வகை             – தொலி, தோல், தோடு, ஓடு, குடுக்கை, மட்டை, உமி, கொம்மை. 

மணி வகை                      – கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை.      

இளம் பயிர் வகை            – நாற்று, கன்று, குருத்து, பிள்ளை, குட்டி, மடலி, பைங்கூழ்.        

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் சொல்லாய்வுக் கட்டுரைகள் நூலின் ஒரு துளியே மேற்கண்ட அனைத்தும்.

ஒரு மொழி பொதுமக்களாலும், அதன் இலக்கியம் புலமக்களாலும் அமையப்பெறும்.

வளர்ந்துவரும் இன்றைய சூழ்நிலைக்கேற்ப கன்னித்தமிழ் கணினித்தமிழ் ஆகிவிட்டது.

பழைமையான நூல்கள் இணையத்தளத்தில் வலம்வருகின்றன.

சொல்லாடல், கவியரங்கம், பட்டிமன்றம் என வலைத்தளம் இன்று இளைஞர்கள் தளமாய் மாறிவிட்டது.

ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ என்று கவிதைவடிவம் புது உருவம் எடுத்திருக்கிறது.

தொடுதிரை, சுட்டி, நேரலை, இயங்கலை, உலவி என்று புதிய பெயர்கள் கொண்டு நான்காம் தமிழ் மிளிர்கிறது.

புதிய சொல்லாக்கம் செயற்கை நுண்ணறிவு பெருகிவரும் இக்காலத்திற்கு அவசியமானதாகும்.

மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்று இனி எவரும் சொல்லக் கூசும் நிலை ஏற்படட்டும்.

அகராதிகள் புதிய சொற்களால் நிரம்பி வழியட்டும்.

 

44. அ, ஆ. முன்னுரை,

உட்தலைப்புகள்,

கதைப்பொருத்தம்,

முடிவுரை.

 

45. அ, ஆ. முன்னுரை,

உட்தலைப்புகள்,

பொருளுரை,

மேற்கோள்கள்,

முடிவுரை.


மேலும் பல கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM  தமிழ்த்துகள்

 

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive