பெயர் - சேக்கிழார்இயற்பெயர் - அருண்மொழித்தேவர்
ஊர் - குன்றத்தூர் - தொண்டைநாடு
தந்தை - வெள்ளியங்கிரி
தாய் - அழகாம்பிகை
காலம் - 12ஆம் நூற்றாண்டு
இயற்றியுள்ள நூல்கள்
- பெரியபுராணம்
- திருத்தொண்டர் புராண சாரம்
- திருப்பதிக் கோவை
இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர்.
சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலைப் படிப்பதனால்,
சோழனையும் மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.
பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்ததாக நம்பிக்கையுண்டு.
சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர்
உத்தம சோழப் பல்லவன்,
தொண்டர் சீர் பரவுவார்,
தெய்வப்புலவர்,
தெய்வச்சேக்கிழார்
போன்ற பட்டங்களைப் பெற்றவர்.
பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ என்று இவரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.