மாங்குடிமருதனார் என்பவர் சங்ககால நல்லிசைப் புலவர்களில் ஒருவர்.
இவர் பத்துப்பாட்டு எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர்.
மதுரைக்காஞ்சியில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார்.
மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
இவனும் ஒரு புலவன்.
இவன் தனது பாடலில் புலவர்கள் தன் அவையில் மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு பாடியதைக் குறிப்பிட்டுள்ளான்.
- மாங்குடி என்னும் ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ளது.
- சங்ககாலத்தில் இந்த மாங்குடியில் வாழ்ந்த புலவர் மாங்குடி கிழார்.
- இவர் மாங்குடி மருதனார் என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார்.
- சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன.
- பாடல்கள்
- அகநானூறு 89,
- குறுந்தொகை 164, 173, 302,
- நற்றிணை 120, 123,
- புறநானூறு 24, 26, 313, 335, 372, 396
- மதுரைக்காஞ்சி