பெயர் - வாணிதாசன்
இயற்பெயர் - அரங்கசாமி என்ற எத்திராயலு
புனைப்பெயர் - ரமி
ஊர் - வில்லியனூர் - புதுவை.
தந்தை - அரங்க திருக்காமு
தாய் - துளசியம்மாள்
பிறந்த தேதி - 22 -07 -1915
மனைவி - ஆதிலட்சுமி.
பட்டங்கள் - கவிஞரேறு, பாவலர்மணி.
தந்தை - அரங்க திருக்காமு
தாய் - துளசியம்மாள்
பிறந்த தேதி - 22 -07 -1915
மனைவி - ஆதிலட்சுமி.
பட்டங்கள் - கவிஞரேறு, பாவலர்மணி.
இவர், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர்.
அத்தொடக்கக் கல்வியே பாப்புனையும் தமிழுணர்விற்கும் தொடக்கமாயிற்று.
இவர்தம் பாடல்கள், சாகித்திய அகாதமி வெளியிட்ட 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற நூலிலும் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இவர் பிரெஞ்சு மொழியிலும் புலமை பெற்றவர்.
'தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு 'செவாலியர்' என்ற விருதினை வழங்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர்.
34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
பாரதிதாசன் அடியொட்டிப் பாடிய கவிஞர்களை அக்காலத்தே வெளிவந்த 'பொன்னி' இதழ், 'பாரதிதாசன் பரம்பரை' என்னும் தலைப்பிட்டு அறிமுகப்படுத்தியது.
பாரதிதாசன் பரம்பரையினருள் வாணிதாசன் குறிப்பிடத்தக்கவர்.
"தமிழச்சி", "கொடிமுல்லை" ஆகிய சிறு காப்பியங்களையும், 'தொடுவானம்', 'எழிலொவியம்', 'குழந்தை இலக்கியம்' ஆகிய கவிதை நூல்களை வழங்கியுள்ளார்.
எனினும் 'வாணிதாசன் கவிதைகள்' என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.
இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம்.
எனவே இவரை 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த்' என்று பாராட்டுகின்றனர்.
கவிஞர் வாணிதாசன் எழுதிய நூல்கள்
- இரவு வரவில்லை
- இன்ப இலக்கியம்
- இனிக்கும் பாட்டு
- எழில் விருத்தம்
- எழிலோவியம்
- குழந்தை இலக்கியம்
- கொடி முல்லை
- சிரித்த நுணா
- தமிழச்சி
- தீர்த்த யாத்திரை
- தொடுவானம்
- பாட்டரங்கப் பாடல்கள்
- பாட்டு பிறக்குமடா
- பெரிய இடத்துச் செய்தி
- பொங்கற்பரிசு
- வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி
- வாணிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதி
- வாணிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி
- விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ
இறந்த தேதி - 07 -08 -1974