கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, November 12, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-11-2025. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

12-11-2025. புதன்

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : நட்பியல் ;

அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை ;

 குறள் எண்: 894.

குறள் :

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க் காற்றாதார் இன்னா செயல்.

உரை :

ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல்,

தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

பழமொழி :

அமைதியாக உழை ; உன் வெற்றியே பேசட்டும்.

Work hard in silence; let success make the noise.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கோபம் என் அறிவை மறைக்கும்.

2. எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.

பொன்மொழி :

அமைதியை விட உயர்வான சந்தோஷம்

இந்த உலகில் வேறு ஒன்றும் இல்லை. கௌதம புத்தர் .

பொது அறிவு :

01. பரப்பளவு அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு எது?

கனடா- Canada

02. "ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்" என்று அழைக்கப்படும் நாடு எது?

ஸ்விட்சர்லாந்து-Switzerland

English words :

labour-work

+ gruffly-sadly

தமிழ் இலக்கணம்:

எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

ஒன்று + கொடு = ஒன்றுகொடு

இரண்டு + பேர் = இரண்டுபேர்.

அறிவியல் களஞ்சியம் :

புவி வெப்பத்தை அதிகரிக்க வைக்கும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது மீத்தேன். இது பசுக்களின் சாணத்தில் இருந்து அதிகளவில் வெளிவருகிறது. சுவீடன் நாட்டு விவசாய பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசுஞ்சாணத்தில் 'ஆஸ்பராகாப்சிஸ் டாக்ஸ்ஃபோர்மிஸ்' எனும் சிவப்பு நிறப்பாசியைச் சேர்ப்பதன் வாயிலாக, அதிலிருந்து உற்பத்தி ஆகும் மீத்தேனை, 44 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

நவம்பர் 12 உலக நுரையீரல் அழற்சி நாள்

உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) என்பது நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும். சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாளை கொண்டாடின. 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளாவிய அளவில் நியூமோனியா நோய் தாக்கத்தால் ஆண்டுக்கு சராசரியாக 1.6 மில்லியன் பேர் இறக்கின்றனர். 5 வயதிற்கும் குறைந்த 155 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைகின்றனர். இது எயிட்சு, மலேரியா, எலும்புருக்கி நோய் போன்றவற்றினால் இறப்பு ஏற்படுவதை விட அதிகம் என மருத்துவ சங்க குறிப்பு தெரிவிக்கின்றது.

நவம்பர் 12

சலிம் அலி அவர்களின் பிறந்தநாள்.

- Salim Ali;

பிறப்பு நவம்பர் 12, 1896 - இறப்பு சூலை 27, 1987.

உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலிம் அலியின் முழுப்பெயர் சலிம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும். இவர் இந்தியாவில் முதன் முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.

சலிம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

"இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் தன்வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலிம் அலியின் முக்கிய நூல்களாகும்.

நீதிக்கதை -காகமும் நாய்க்குட்டியும்

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள். அந்த நாய்க்குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட நாய்க்குட்டி காகத்திடம் சென்று. என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது. அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள் என்றது நாய்க்குட்டி. எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்! என்று சொன்னது காகம். உண்மைதான்! என்றது நாய்க் குட்டி.

பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத் தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம். ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி. இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப்பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் என் இனத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.

ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி. அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம். திருடுதல், ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

நீதி : ஒருவர் செய்கின்ற நல்ல செயல்களைவிட தீய செயல்களே முன்னிற்கும்.

இன்றைய செய்திகள்

12.11.2025

* சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 10 முதல் அமல்.

* டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்- பிரதமர் மோடி உறுதி.

*பூத் கமிட்டியினர் வாக்காளர் விவரங்களை சேகரித்து நிரப்ப தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து படிவமும் செயலியும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் எஸ்ஐஆர் செயல்படுத்தப்படும் விதம் விசாரிக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

விளையாட்டுச் செய்திகள்

ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அணியை வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அணி சாதனை.

Today's Headlines 12.11.2025

* The Australian Government announced a Children's social media ban, which comes into effect from December 10th onwards

* Delhi car blast incident: Conspirators will be brought to justice

PM Modi assured

* Booth committees have been provided with a form and an app from the Chief Election Commission to collect and fill in voter details. The manner in which S.I.R. is being implemented in each area is being investigated, and a report is being prepared.

SPORTS NEWS

Jammu and Kashmir team defeats Delhi team for the first time in Ranji Trophy history.

Prepared by

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive