கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 03, 2021

சிந்தித்துச் செயல்படு குட்டிக்கதை sinthithu seyalpadu kutty kathai tamil short story

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு  பாம்பு வாழ்ந்து வந்தது. 

ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். 

பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. 

பாம்புக்குப் பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள்.

வேறு வழி இல்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

     ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். 

அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். 

ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். 

அவர் பாம்பிடம் பேசி ஊர் மக்களைக் கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். 

பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தது.

     ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. 

சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. 

பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் செய்து கொண்டிருந்தனர். 

உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

     யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். 

பாம்பும் நடந்த கதையை எல்லாம் கூறி அழுதது.

     யோகி பாம்பைப் பார்த்து உன்னை மக்களைக் கடிக்க வேண்டாம் என்று தானே கூறிச் சென்றேன். 

பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் "சொல்லவில்லையே" என்று கேட்டார். 

இதற்குப் பின் பாம்பு புரிந்து பிழைத்துக் கொண்டது.

தமிழ்த்துகள்

Blog Archive