ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது.
அதற்குக் காரணம் ஒரு பக்கம் வேடன் விரட்டுகிறான், இன்னொரு பக்கம் நாய், மறுபக்கம் புலி என எந்தப்பக்கம் திரும்பினாலும் முயலுக்கு எதிரிகள்.
சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது.
எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப் பார்த்தது.
இறுதியாக குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று சென்றது முயல்.
அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவிக்குதித்ததை முயல் பார்த்தது.
உடனே முயல் சிந்தித்தது.
அட! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா? என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு நாமும் வாழலாம் என்று மனமாற்றம் கொண்டது.
தற்கொலை செய்து கொள்வதற்கும் வலிமையான மனம் வேண்டும் என உணர்ந்தது.
அவ்வளவு வலிமையான மனமிருக்கும் நாம் ஏன் தற்கொலை செய்யணும், வாழ்ந்து தான் பார்ப்போமென்று வாழத் தொடங்கியது.