கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 31, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பத்தாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 1 விடைக்குறிப்பு Answer key activity 1

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
பத்தாம் வகுப்பு 
தமிழ் 
செயல்பாடு 1 
விடைக்குறிப்பு 
1.கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து எழுதுக. 1.வளையம் 
குழந்தை வளையம் வைத்து விளையாடியது.
2.சல்லி நாணயம் 
தமிழகத்தில் பழங்காலத்தில் சல்லி நாணயம் புழக்கத்தில் இருந்தது. 
3.மஞ்சுவிரட்டு 
மஞ்சுவிரட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. 
4.பணமுடிப்பு 
புலவரின் பாடலைக் கேட்டு மன்னர் பணமுடிப்பு வழங்கினார். 5.புழங்கிக்கொண்டிருந்த 
அக்காலத்தில் புழங்கிக்கொண்டிருந்த நாணயங்கள் தற்போது மதிப்பிழந்தன. 
2.சரியா? தவறா? 
1.புளியங் கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும் பழக்கம் தற்போதும் உள்ளது.
 சரி 
2.மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமில்லை.
 தவறு 
3.ஏறுதழுவுதல் குறித்து உங்களுக்குத் தெரிந்த செய்திகளை ஐந்து வரிகள் எழுதுக.
    1.ஏறு தழுவுதல் என்பது சல்லிக்கட்டு என்று அழைக்கப்பட்டது. 
2.சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தைக் குறிக்கும். 
3.புளியங் கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் உள்ளது. 
4.அக்காலத்தில் புழங்கிக்கொண்டிருந்த சல்லி நாணயங்களைத் துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டும் பழக்கமும் இருந்தது. 
5.மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும். 
4.கோடிட்ட இடத்தை நிரப்புக
கொடுக்கப்பட்டுள்ள பத்திக்கு ஏற்ற தலைப்பு ஏறுதழுவுதல்
5.ஏறுதழுவுதலுக்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களை எழுதுக. 
மாடு பிடித்தல் 
மாடு அணைதல்
மாடு விடுதல் 
மஞ்சு விரட்டு 
வேலிமஞ்சுவிரட்டு 
எருதுகட்டி 
காளை விரட்டு
ஏறு விடுதல் 
சல்லிக்கட்டு.

தமிழ்த்துகள்

Blog Archive