1.வள்ளுவம்,
சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி
விளக்குக.
வள்ளுவம்
கூறும் சிறந்த அமைச்சருக்குரிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்தும் விதம் –
தொழில்
செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை
ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.
உழவர் ஒருவர்
உழவுத் தொழிலுக்குத் தேவையான கலப்பை, மண்வெட்டி, கூடை, கடப்பாரை முதலிய கருவிகளைத்
தயார் நிலையில் வைப்பார். ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப நேர்த்தி
செய்யப்பட்ட விதைகள் இருக்கும். அகல உழுவதைவிட ஆழ உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில்
நெல்லுக்கு நண்டோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட இடைவெளி விட்டு நடுவார்,
பராமரிப்பார், அதிக விளைச்சல் காண்பார். இது பல்வேறு தொழில்களுக்கும் நம்
செயல்களுக்கும் பொருந்தும்.
மனவலிமை,
குடிகாத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும்
சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.
இவ்வைந்தும்
பெற்றவர் ஒரு சிறந்த குடும்பத்தலைவராக வாழ முடியும்.
இயற்கையான
நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகளும்
நிற்க இயலாது.
ஒரு செயலைச்
செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து
செயல்பட வேண்டும்.
ஏட்டுச்சுரைக்காய்
கறிக்கு உதவாது. உலகின் இன்றைய தேவை உணர்ந்து செயல்படும் வணிக நிறுவனம்
வெற்றிபெறும். மின்னணுப் பரிமாற்றம், இணையத்தளம் மூலம் வணிகம், பல்பொருள் அங்காடி,
விளம்பர உத்தி என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினால் வெற்றி எளிதில் கிட்டும்.
2.பலரிடம்
உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல
உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும்
நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை ?
தம்
நல்வாழ்வுக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அண்டாது வாழும் ஒருவற்கு வள்ளுவர்
கூறும் கருத்துகள் –
·
சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு
இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும் வலிமை இல்லாமலும் இருந்தால் அவரால் பகைவரின்
வலிமையை எதிர்கொள்ள இயலாது.
·
தம்மிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல்
என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்.
·
குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை
உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக்கொண்டு போற்றுவர்.
·
அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்பதறிந்து
வாழவேண்டும். ஊருணி நீர் நிறைந்தது போல நம் செல்வம் நல்ல உள்ளங்களுக்கும்
சுற்றங்களுக்கும் பயன்பட வேண்டும்.