கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 17, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 சிறுவினா விடை 10th TAMIL UNIT 6 SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS

 இயல் 6 சிறுவினா விடை            3 மதிப்பெண்கள்

1.வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக .

* வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாகச் செங்கீரை ஆடியபோது அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன .

* இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன .

* பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறும் சரிந்து ஆடுகின்றன .

* பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டியும் படுகின்றன. கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடுகின்றன .

* உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளியுள்ள முத்துகளோடு ஆடுகின்றன.

* தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகப் பெருமானே அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட செங்கீரை ஆடுவாயாக! என்று குமரகுருபரர் வர்ணித்துள்ளார் .

2.நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு  எழுதுக .

நவீன கவிதை

        இறுக்கமாக மலரைத் தொடுத்தால் மலரின் காம்பு முறிந்துவிடும் .

தளரப் பிணைத்தால் நழுவி தரையில் உதிர்ந்து விடும் .

அப்படியே விட்டாலும் குறிப்பிட்ட நேரமானதும் வாடிவிடும்.

ஒரு நாள் வாழும் வாழ்க்கைக்கே மலர் வருந்தாமல் தினமும் சிரித்துக் கொண்டே தான் பூக்கிறது .

அப்படிப்பட்ட பூவை எப்படி என்னால் தொடுக்க முடியும் என்று மென்மை மனம் கொண்ட பெண்மை பேசுகிறாள் .

நாட்டுப்புறப்பாடல்

         மாரியம்மனுக்கு கையால் பூ எடுத்தால் பூக்களின் காம்புகள் அழுகிப் போய்விடும் என்றும்,  விரலால் பூ எடுத்தால் வெம்பி விடும் என்றும் தங்கத்தாலான துரட்டி கொண்டு மாரியம்மனுக்குத் தாங்கி மலரெடுத்தார் என்று நாட்டுப்புறப் பாடல் நவில்கிறது .

ஒப்பீடு

இவ்விரு கவிதைகளிலும் பூக்களின் மென்மைத் தன்மை பாடுபொருளாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது .

3.’கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது, மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன’ -  காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

காலப்போக்கில் நெய்தல், குறிஞ்சி, மருதநில மாற்றங்கள் –                                         

கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் பல பகுதிகள் மீன்பிடி துறைமுகங்கள் ஆகிவிட்டன. பல சுற்றுலாத்தளங்கள் ஆகிவிட்டன. ஆடம்பர விடுதிகள் பெருகிவிட்டன. எனினும் மீன்பிடித்தலும் உப்புக்காய்ச்சுதலும் தொடர்கின்றன.

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலங்கள் மலைவாழ் இடங்களாகவும், சுற்றுலாத்தளங்களாகவும் மாறிவிட்டன. தேயிலை, மிளகு, காப்பி, இரப்பர் தோட்டங்களாக்கி வருவாய் ஈட்டுகிறான் மனிதன். எனினும் தேனெடுத்தல், தினை விளைத்தல் இன்னும் மலைவாழ் மக்களால் தொடர்கிறது.

வயலும் வயல் சார்ந்த மருதநிலம் இன்று குடியிருப்புக் கட்டடங்களாகிவிட்டன. வணிக நிறுவனங்கள், கடைவீதிகள், பூங்காக்கள் பெருகிவிட்டன. எனினும்  தினை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறுதானிய உற்பத்தி நடக்கிறது. வயல்கள் ஆழ்துளைக் கிணறுகளின் உதவியுடன் நெல், கரும்பு, வாழை, தென்னையை விளைவிக்கின்றன.

4)படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக .





பரதநாட்டியம் பற்றிக் கூறுக.

பரதநாட்டியம்

          பரதநாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும்.

இது மிகத் தொன்மை வாய்ந்ததும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும்.

புராணங்களில் பரத முனிவரால் உருவாக்கப்பட்டதாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.

பழந்தமிழர் இக்கலையைக் கூத்து என்று அழைத்தனர்.

ஆடல், நாட்டியம், நாடகம் ஆகியவை கலந்த ஒன்று பரதம் என்பர்.

கரகாட்டம் பற்றி நீ அறிவன யாவை ?

கரகாட்டம் 

           பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம்.

கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ சிறிய குடத்தையோ தலையில் வைத்து, தாளத்திற்கு ஏற்ப ஆடுவது கரகாட்டம் .

இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது .



















தமிழ்த்துகள்

Blog Archive