பத்தாம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு 2 விடைக்குறிப்பு
பகுதி அ
- இயற்கை
- மென்காற்று
- இளங்கோவடிகள்
- இருத்தல்
- முல்லைப்பாட்டு
- தொகைநிலைத்தொடர்
- பண்புத்தொகை
- பண்புத்தொகை
- பாஞ்சாலி சபதம்
- பாரதியார்
11. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.
12.வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம்உண் டாம்.
13.கிழக்கு - கொண்டல்
மேற்கு - கோடை
வடக்கு - வாடை
தெற்கு - தென்றல்
14.மரம் தரும் வரம் உயிர்வளி
15.ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர். அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.
இதுவே விரிச்சி எனப்படும்.
பகுதி இ
16காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள்
கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய் ஏற்படுகிறது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைகிறது.
அமிலமழை பெய்கிறது.
17.
அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது.
வலம்புரிச் சங்கு பொறித்த கைகளை உடைய திருமால்,
குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத்
தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழை மேகம்.
அம்மேகம் ஒலிக்கும் கடலின் குளிர் நீரைப் பருகிப்
பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச்
சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப்
பொழிகிறது.