கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 31, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 1 விடைக்குறிப்பு 9th tamil Answer key activity 1

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

ஒன்பதாம் வகுப்பு 

தமிழ் 

செயல்பாடு 1 

விடைக்குறிப்பு

கீழ்காணும் பத்தியைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக. 

1.உரைப்பகுதியில் பழமையான கலையாகக் குறிப்பிடப்படுவது எது? பழமையான கலையாகக் குறிப்பிடப்படுவது மண்பாண்டக் கலை. 

2.களிமண்ணால் செய்யப்படும் இசைக்கருவி எது என்பதைத் தெரிவு செய்க. 

மத்தளம் 

கடம் 

நாதஸ்வரம் 

வீணை 

விடை 

கடம்

3.வீடுகளில் பயன்படுத்தும் மண்பாண்டங்கள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக. 

வீடுகளில் பயன்படுத்தும் மண்பாண்டங்கள் சிலவற்றின் பெயர்கள் 

குடம் 

கலையம் 

மூடி 

உழக்கு 

அகல் 

உண்டியல் 

தொட்டி 

4.உடல் நலத்திற்கு மண்பாண்டங்கள்  எவ்வகையில் உதவுகின்றன? மண்பண்டங்களில் சமைத்த உணவு நல்ல சுவையுடன் இருக்கும்.

மேலும் உடல் நலத்திற்கும் நல்லது.

மண்பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். 

5.பாண்டம் செய்யப் பயன்படும் மண் எங்கிருந்து கிடைக்கிறது? 

குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் இருந்து களிமண் கிடைக்கிறது.

6.பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக. 

ஏற்ற தலைப்பு 

மண்பாண்டக் கலை.

தமிழ்த்துகள்

Blog Archive