பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 2
விடைக்குறிப்பு
கொடுக்கப்பட்ட விடைகளுக்கு ஏற்ற வினாக்கள் அமைக்க.
1.அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.
அரிக்கமேடு அகழாய்வில் எந்த மண் பாண்டங்கள் கிடைத்தன?
2.உழைத்துச் சேர்த்த பணத்தை பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று இல்லை.
உழைத்துச் சேர்த்த பணத்தை எதில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று இல்லை ?
3.தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளன ?
4.உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.
உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன என்று யார் கூறுகிறார் ?
2.பத்தியைப் படித்து காரணகாரிய அடிப்படையில் வினாக்கள் உருவாக்குக.
வினாக்கள்
1.பெரியாரின் சிந்தனைகள் எதன் அடிப்படையில் அமைந்தவை ? காரணத்தை அறிய
2.தமது சீர்திருத்தக் கருத்துகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் யார் ? செயல் செய்தவரை அறிய
3.பெரியார் சமுதாயத்தை எப்பழக்கங்களிலிருந்து மீண்டெழ அரும்பாடுபட்டார் ? காரணத்தை அறிய
4.மனித நேயம் வளர்க்கப் பிறந்தவை யாருடைய சிந்தனைகள் ? செயல் செய்தவரை அறிய
5.இறுதி மூச்சுவரை சமூகச் சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து மறைந்தவர் யார் ? செயல் செய்தவரை அறிய.