கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 24, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 சிறுவினா விடை 10th TAMIL UNIT 7 SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS

 இயல் 7 சிறுவினா விடை            3 மதிப்பெண்கள்

1)முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவி பாடுகிறார் ?

·         முதல் மழை விழுந்ததும், மேல்மண் பதம் ஆகி விட்டது. அதிகாலை வெள்ளி முளைத்துவிட்டது; விடியற்காலை ஆகி விட்டது நண்பா, விரைந்து காளைகளை ஓட்டிச் செல் .

·         ஏழை தொழுது, புலன் வழிபட்டு மாட்டைப் பூட்டி, காட்டை உழுவோம் .

·         ஏர் புதிதல்ல, ஏறும் நுகத்தடி கண்டது; காடும் புதிதல்ல; கரையும் பிடித்தது தான்; கை புதிதல்ல; கார்மழையும் புதிதல்லநாள் புதிது; நட்சத்திரம் புதிது; ஊக்கம் புதிது ; வலிமை புதிது.

·         மாட்டைத் தூண்டி எழுப்பி, கொழுவைப் பொருத்தினால் மண் புரண்டு, மழை பொழியும் . நிலமும் சிலிர்த்துப் பிறகு நாற்றும் நிமிர்ந்து வரும் .

·         எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்; கவலையே இல்லை கிழக்கு வெளுக்குது; பொழுதேறப் பொன் பரவும் ஏரடியில் நல்ல வேளையில் குழுவை நாட்டுவோம் என்று கு.ப. ரா. கவி பாடுகிறார் .

2.அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான், அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் தொடுக்கும் போர் - புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணத்தின் வழி விளக்கம் –

o    அந்திப்பொழுது .. ஆநிரைகள் ஆவலுடன் இல்லம் தேடி ஓடி வர, கோவலர்கள் களைத்த உடலுடன் உடன்வர அவந்தி நாட்டு வீரர்கள் வெட்சிப்பூச்சூடி எதிர்ப்பட்டனர்.

o    ஆநிரைகளைக் கவர்ந்து அவந்தி நாட்டை நோக்கி ஓட்டிச்சென்றனர்.                          அகத்தியன்

o    உரமேறிய மருதநாட்டு மன்னன் சினந்தான்.

o    கரந்தைப்பூச்சூடிய  தம் வீரர்களை புலர்காலைப் பொழுதில் ஏவி தம் ஆநிரைகளை மீட்டுவர அவந்தி நாட்டுக்கு அனுப்பினான்.

o    தம் எண்ணம் நிறைவேறப் போகிறது என்ற பேரவாவுடன் வஞ்சிப்பூச்சூடிய தம் வீரர்களை அனுப்பி அவந்தி நாட்டரசன் மருதநாட்டு மண்ணைத் தனதாக்க நினைத்தான்.

o    ஆநிரை மீட்டுவந்த வேகத்தில் போர் முரசு அறைந்து நாடி வரும் பகையைப் பொடி செய்து அனுப்ப மருதநாட்டு மன்னன் எதிர்போர் புரிவதற்காகக் காஞ்சிப்பூச்சூடிய தம் வீரர்களைப் போர்க்களத்துக்கு அனுப்பினான்.

o    தம் கோட்டையைக் காக்கவேண்டிய கட்டாயத்தில் மருதநாட்டு வீரர்கள் நொச்சிப்பூச்சூடி போரிட்டனர்.

o    மாற்றரசனாம் மருதநாட்டு வீரர்களின் தாக்குதலை முறியடிக்க உழிஞைப்பூச்சூடிய அவந்திநாட்டு வீரர்கள் கோட்டை மதிலைச் சுற்றி வளைத்தனர்.

o    பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப்பூச்சூடிப் போர்க்களத்தில் கடும்போர் புரிந்தனர்.

3.தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்கம்

இடம் – ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர். அதனை அறிந்த முதல்வர் இராஜாஜி தம் பதவியையும் துறக்க முன்வந்தார். நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையம் செய்த பரிந்துரைக்கு எதிராக மாநகரத் தந்தை செங்கல்வராயன் சென்னை மாநகராட்சிச் சிறப்புக் கூட்டத்தைக்கூட்டினார். சென்னை பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து ம.பொ.சிவஞானம் அவர்கள் முழங்கிய முழக்கம் இதுவாகும்.

விளக்கம் –         ம.பொ.சி. அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழங்கினார். என்ன விலை கொடுத்தேனும் சென்னை ஆந்திர மாநிலத்திற்குச் சொந்தமாக விடமாட்டோம் என்பது இதன் பொருளாகும். 25.03.1953 அன்று பிரதமர் நேரு அவர்கள் வெளியிட்ட உறுதிமொழியால் சென்னை தமிழருக்கே என்பதும் உறுதியானது.

4.பகர்வனர் திரிதிரு நகரவீதியும்

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

அ.இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது ?

இவ்வடிகள் இடம் பெற்ற நூல் – சிலப்பதிகாரம்.       இந்திரவிழா ஊரெடுத்த காதை

ஆ.பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை

கர்வனர்          - ட்டினும்                     

ட்டு                 - காருகர்                       

தூசும்                - துகிரும்

இ.எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை

ர்வனர் - நரவீதியும்              பட்டினும் - கட்டு

ஈ.காருகர் - பொருள் தருக.                     

காருகர் - நெய்பவர் (நெசவாளர்)

உ.இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை ?

இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் – சந்தனம், அகில்.

5.பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.

பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக்கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக்கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை, ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து –

மெய்க்கீர்த்தி என்பது மன்னருடைய சாசனங்களில் தொடக்கத்தில் அமைக்கப் பெறும். அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும். முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது.

தமிழ்த்துகள்

Blog Archive