கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 10, 2021

ஏழாம் வகுப்பு ஒப்படைப்பு தமிழ் விடைக்குறிப்பு 7th tamil assignment key answer

 ஏழாம் வகுப்பு ஒப்படைப்பு தமிழ் விடைக்குறிப்பு

பகுதி அ

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. ஆ.கொல்லாமை

2.அ.வெ.இராமலிங்கனார்

3.ஈ.பெருமை+செல்வம்

4.ஆ.உபகாரி

5.இ.படித்தல், எழுதுதல்

6.அ.நன்னூல்

7.ஆ.கரம்

8.அ.பட்டு

9.ஆ.குற்றியலிகரம்

10.ஈ.அரை

பகுதி ஆ

குறுவினா

1. காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் வெ.இராமலிங்கனார் காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.


2.மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி.


3.பரிபாடல், திருக்குறள்.


4.பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல்நிலையாகும்.


5.பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதால் தமிழ் இரட்டைவழக்கு மொழி என அழைக்கப்படுகிறது.


6.இரண்டு

முதலெழுத்து, சார்பெழுத்து.


7.எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல என் தம்பிக்கு படிப்பின் முக்கியத்துவத்தைக் கூறக் கூறப் புரிந்து கொண்டான்.


பகுதி இ

பெருவினா


1. உடுமலை நாராயண கவி பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுகிறார்.

தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர்.

தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.

நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.


2.பத்து

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்  
பகுதி ஈ

செயல்பாடு

1.செந்தமிழ், தென்மொழி, ஒளிர்தமிழ், வண்டமிழ், தனித்தமிழ், தண்டமிழ்.

2.தேனினும், ஊனினும், வானினும்

3.வண்மை + தமிழ்

4.தேனை

5.மாந்தருக் கிருகண்ணா வயங்கு நன்மொழி.

தமிழ்த்துகள்

Blog Archive