கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 10, 2021

ஒப்படைப்பு பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு tenth tamil assignment key answer

ஒப்படைப்பு பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு

பகுதி - அ

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தென்னன் மகளே - இத்தொடரில் தென்னன் என்ற சொல் குறிக்கும் மன்னன் யார் ?

அ. சேரன்

ஆ. சோழன்

இ. பாண்டியன்

ஈ. பல்லவன்

விடை : இ ) பாண்டியன் 

2. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. கால்டுவெல்

ஆ. மாக்ஸ்முல்லர் 

இ. க. அப்பாத்துரை 

ஈ. தேவநேயபாவாணர்

விடை : அ ) கால்டுவெல்

3. 'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது யாது?

அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ. பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ. ஐம்பெரும்காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ. வணிகக்கப்பல்களும் அணிகலன்களும்

விடை : அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

4. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?

அ. இளங்குமரன்

ஆ. வேதாசலம்

இ. விருத்தாசலம்

ஈ. துரை மாணிக்கம்

விடை : ஈ ) துரை மாணிக்கம்

5. பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?

அ. பெருஞ்சித்திரனார்

ஆ. திரு.வி.க 

இ. அப்பாத்துரையார்

ஈ. இளங்குமரனார்

விடை : ஈ ) இளங்குமரனார்

6. கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ. கட்டை

ஆ. கொழுந்தாடை

இ. செம்மல்

ஈ. முறி

விடை : ஆ ) கொழுந்தாடை

7. நெல், புல் முதலான தானியங்களுக்கு வழங்கப்படும் சொல் என்ன?

அ. தாள்

ஆ. கூலம்

இ. சண்டு

ஈ. சருகு

விடை : அ ) தாள்

8. இரட்டுற மொழிதலின் வேறு பெயர் யாது?

ஆ. உவமை

இ. சிலேடை

அ. பிறிதுமொழிதல்

ஈ. தனிமொழி

விடை : இ ) சிலேடை

9. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?

இ. ஐந்து

ஈ. ஒன்பது

ஆ. ஆறு

அ. பத்து

விடை : அ ) பத்து

10. செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயரைத் தருக.

அ. ஒற்றளபெடை

ஆ. உயிரளபெடை

இ. இன்னிசையளபெடை

ஈ. சொல்லிசை அளபெடை

விடை : இசைநிறை அளபெடை

                           பகுதி - ஆ

II. குறுவினா

11. தமிழுக்கும் கடலுக்குமான இரட்டுறமொழியும் தன்மையைக் குறிப்பிடுக.










12. தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கும் வழங்கும் சொற்களைத் தருக.

பூம்பிஞ்சு - பூவோடு கூடிய இளம்பிஞ்சு

பிஞ்சு -  இளம் காய்

வடு -  மாம்பிஞ்சு 

மூசு -  பலாப் பிஞ்சு

கவ்வை -  எள் பிஞ்சு

இளநீர் -  முற்றாத தேங்காய்

நுழாய் - இளம்பாக்கு

கருக்கல் -  இளநெல்

கச்சல் -  வாழைப்பிஞ்சு



13 ) தேவநேயப் பாவாணர் குறிப்பு வரைக.

            மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணர் பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் ,  மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 
தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். 
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர். 
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.



14. இணை ஒப்பு என்று கூறப்படுவது யாது?

               உவம உருபு மறைந்து வந்தால் அதற்கு எடுத்துக்காட்டு உவமையணி  என்று பெயர். 
எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் இணை ஒப்பு  என்கிறோம்.

15. விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?

                   வினையடியுடன் விகுதி சேர்வதால்  உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் எனப்படும்.



                    






     பகுதி - இ

III. நெடுவினா

16. அன்னை மொழியின் புகழைப் பெருஞ்சித்திரனார் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?

  
























17. தமிழ்ச் சொல்வளமுடையது, தமிழ்நாடு பொருள் வளமுடையது கூற்றை விளக்குக.

தமிழில் உள்ள சொல்வளம் :

தாவரத்தின் அடி வகை – தாள், தண்டு, கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி.

கிளைப்பிரிவுகள்   – கவை, கொம்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு.

காய்ந்த அடி, கிளை          – சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை.

இலை வகை                 – இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு.

கொழுந்து வகை             – துளிர், முறி, குருத்து, கொழுந்தாடை.                    

பூ                                  – அரும்பு, போது, மலர், வீ, செம்மல்.

பிஞ்சு வகை    – பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூசு, கவ்வை, குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல்.

குலை வகை                  – கொத்து, குலை, தாறு, கதிர், அலகு, சீப்பு.  

கெட்டுப்போன காய் வகை            – சூம்பல், சிவியல், சொத்தை, வெம்பல், அளியல், அழுகல், சொண்டு.   

பழத்தோல் வகை         – தொலி, தோல், தோடு, ஓடு, குடுக்கை, மட்டை, உமி, கொம்மை.        

மணி வகை    – கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை.     

இளம் பயிர் வகை                       – நாற்று, கன்று, குருத்து, பிள்ளை, குட்டி, மடலி, பைங்கூழ்.    

                  தமிழ்நாடு எத்துணைப் பொருள்வளமுடையதென்பது, அதன் விளைபொருள்வகைகளை நோக்கினாலே விளங்கும். பிறநாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப்பட்டனவாகவுமிருக்க,
தமிழ்நாட்டிலுள்ளவையோ, பலவாகவும் பல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. 
எடுத்துக்காட்டாக கோதுமையை எடுத்துக்கொள்ளின் அதில் சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன. 

தமிழ்த்துகள்

Blog Archive