கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, January 01, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சனவரி 6

நாள் - 06-01-2025 - 10-01-2025

 வகுப்பு - 10

பாடம் - தமிழ்

தலைப்பு - திருப்புதல்

முதல் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள்

1.    ’அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது’ இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

2.    தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.              தமிழ்த்துகள்

இப்பத்தியில் உள்ள தொகை நிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

3.    ’கண்ணே கண்ணுறங்கு!

காலையில் நீயெழும்பு!           தமிழ்த்துகள்

மாமழை பெய்கையிலே

மாம்பூவே கண்ணுறங்கு!

பாடினேன் தாலாட்டு!

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!’ – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

1.    நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார். ”இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய  குட்டியைத் தடவிக்கொடுத்து, ”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம் ”நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.        தமிழ்த்துகள்

2.    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.        தமிழ்த்துகள்

3.    ’கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது, மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன’ -  காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

4.    அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான், அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

5.    ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.          தமிழ்த்துகள்

6.    கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.


தமிழ்த்துகள்

Blog Archive