கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 03, 2021

அடக்கம் - குட்டிக்கதை adakkam kutty kathai tamil short story

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. 

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. 

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. 

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது! என்று சொல்லிச் சிரித்தது.

     அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, அப்படியா, நீ பயந்து விட்டாயா? என்று கேட்டது. 

அதற்குக் கோவில் யானை கீழ் கண்டவாறு பதில் சொன்னது, நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். 

மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன், பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். 

இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.

தமிழ்த்துகள்

Blog Archive