தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Tuesday, August 31, 2021
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் மாதிரி பாடத்திட்டம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் 9th tamil model lesson plan
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
மாதிரி பாடத்திட்டம்
செப்டம்பர் 1 - 4
செயல்பாடு 1,2
செப்டம்பர் 6 - 9
செயல்பாடு 3,4
செப்டம்பர் 13 - 18
செயல்பாடு 5,6
செப்டம்பர் 20 - 25
செயல்பாடு 7,8
செப்டம்பர் 27 - அக்டோபர் 1
செயல்பாடு 9,10
அக்டோபர் 4 - 9
செயல்பாடு 11,12
அக்டோபர் 11 - 13
செயல்பாடு 13,14
அக்டோபர் 18 - 23
செயல்பாடு 15
அக்டோபர் 25 - 30
செயல்பாடு 16,17
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் மாதிரி பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் 10th model lesson plan
பத்தாம் வகுப்பு
தமிழ்
மாதிரி பாடத்திட்டம்
செப்டம்பர் 1 - 4
செயல்பாடு 1,2
செப்டம்பர் 6 - 9
செயல்பாடு 3,4
செப்டம்பர் 13 - 18
செயல்பாடு 5,6,7
செப்டம்பர் 20 - 25
செயல்பாடு 8,9
செப்டம்பர் 27 - அக்டோபர் 1
செயல்பாடு 10,11
அக்டோபர் 4 - 9
செயல்பாடு 12,13,14
அக்டோபர் 11 - 13
செயல்பாடு 15,16
அக்டோபர் 18 - 23
செயல்பாடு 17,18
அக்டோபர் 25 - 30
செயல்பாடு 19,20
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 2 விடைக்குறிப்பு 9th tamil Answer key activity 2
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 2
விடைக்குறிப்பு
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு திருக்குறளில் பயின்று வரும் எதுகை
ஒழுக்காறாக்
அழுக்காறு
மோனை
ஒழுக்காறா
ஒருவன்தன்
அருஞ்சொற்பொருள்
அழுக்காறு
பொறாமை
1.வருமுன் காப்போம் பாடலில் இடம்பெற்றுள்ள
எதுகை
மட்டு - திட்டு
தூய - நோயை
அருமை - வருமுன்
மோனை
திட்டு - தினமும்
நோய் - நூறு
அருமை - அடையும்
வருமுன் - வையம்
இயைபு
பட்டிடுவாய் - விழுந்திடுவாய்
அப்பா - அப்பா
அறிவாயே - காப்பாயே -
வாழ்வாயே
2.வருமுன் நோயைக் காப்பாயே - இக்கூற்று யாருடையது ?
வருமுன் நோயைக் காப்பாயே - இக்கூற்று
கவிமணி தேசிக விநாயகனார் உடையது.
3.கீழ்காணும் சொற்களுக்கு அகராதியைப் பயன்படுத்திப் பொருள் காண்க
மட்டு, வையம்
மட்டு
அளவு
எல்லை
மதிப்பு
சாமானியம்
நிலவளவுவகை
ஒப்பு
சிறுமை
தாழ்வு
குறைவு
வையம்
பூமி
குதிரை இழுக்கும் வண்டி
தேர்
ஊர்தி
கூடாரவண்டி
சிவிகை
எருது
விளக்கு
யாழ்
4.விடுபட்ட சொல்லை நிரப்புக
தூய காற்றும் நன்னீரும்
சுண்ட பசித்த பின் உணவு
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 1 விடைக்குறிப்பு 9th tamil Answer key activity 1
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 1
விடைக்குறிப்பு
கீழ்காணும் பத்தியைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.
1.உரைப்பகுதியில் பழமையான கலையாகக் குறிப்பிடப்படுவது எது? பழமையான கலையாகக் குறிப்பிடப்படுவது மண்பாண்டக் கலை.
2.களிமண்ணால் செய்யப்படும் இசைக்கருவி எது என்பதைத் தெரிவு செய்க.
மத்தளம்
கடம்
நாதஸ்வரம்
வீணை
விடை
கடம்
3.வீடுகளில் பயன்படுத்தும் மண்பாண்டங்கள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
வீடுகளில் பயன்படுத்தும் மண்பாண்டங்கள் சிலவற்றின் பெயர்கள்
குடம்
கலையம்
மூடி
உழக்கு
அகல்
உண்டியல்
தொட்டி
4.உடல் நலத்திற்கு மண்பாண்டங்கள் எவ்வகையில் உதவுகின்றன? மண்பண்டங்களில் சமைத்த உணவு நல்ல சுவையுடன் இருக்கும்.
மேலும் உடல் நலத்திற்கும் நல்லது.
மண்பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.
5.பாண்டம் செய்யப் பயன்படும் மண் எங்கிருந்து கிடைக்கிறது?
குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் இருந்து களிமண் கிடைக்கிறது.
6.பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
ஏற்ற தலைப்பு
மண்பாண்டக் கலை.
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பத்தாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 2 விடைக்குறிப்பு Answer key activity 2
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பத்தாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 1 விடைக்குறிப்பு Answer key activity 1
Monday, August 30, 2021
ஒப்படைப்பு 2 பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு tenth tamil assignment 2 key answer
பத்தாம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு 2 விடைக்குறிப்பு
பகுதி அ
- இயற்கை
- மென்காற்று
- இளங்கோவடிகள்
- இருத்தல்
- முல்லைப்பாட்டு
- தொகைநிலைத்தொடர்
- பண்புத்தொகை
- பண்புத்தொகை
- பாஞ்சாலி சபதம்
- பாரதியார்
11. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.
12.வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம்உண் டாம்.
13.கிழக்கு - கொண்டல்
மேற்கு - கோடை
வடக்கு - வாடை
தெற்கு - தென்றல்
14.மரம் தரும் வரம் உயிர்வளி
15.ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர். அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.
இதுவே விரிச்சி எனப்படும்.
பகுதி இ
16காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள்
கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய் ஏற்படுகிறது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைகிறது.
அமிலமழை பெய்கிறது.
17.
அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது.
வலம்புரிச் சங்கு பொறித்த கைகளை உடைய திருமால்,
குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத்
தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழை மேகம்.
அம்மேகம் ஒலிக்கும் கடலின் குளிர் நீரைப் பருகிப்
பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச்
சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப்
பொழிகிறது.
Sunday, August 29, 2021
Saturday, August 28, 2021
Friday, August 27, 2021
Wednesday, August 25, 2021
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 9 சிறுவினா விடை TENTH TAMIL UNIT 9 SHORT QUESTIONS AND ANSWERS
1) "சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது" - இடஞ்சுட்டிப் பொருள் தருக.
இடம்: இப்பாடல் வரிகள்
நாகூர்ரூமியால் எழுதப்பட்ட
'சித்தாளு'
என்ற கவிதையில் மனச்சுமையைப் பற்றிக் கூறும் விதமாக
அமைந்துள்ளது .
பொருள்:
சித்தாளின் வாழ்வில் பல்வேறு துயரங்கள் நிகழ்ந்தாலும் அவளின் மனச்
சுமைகளைத் தலையில் உள்ள செங்கற்கள் அறியாது .
விளக்கம் :
பல அடுக்கு மாடி கட்டடங்களை
உருவாக்கி, பிறருடைய கனவுகளை நனவாக்கும் தொழிலாளியின் சுமைகளைப் பற்றி எவரும்
நினைப்பதில்லை. கற்களைச் சுமந்தால் மட்டுமே அடுத்த வேளை உணவு என்ற நிலையில்
அவர்கள் அலுக்காமல் சலிக்காமல் கற்களைச் சுமக்கிறார்கள். அவர்களின் மனச்சுமையைச்
செங்கற்களும் அறிவதில்லை மனிதர்களும் அறிவதில்லை என்று நாகூர் ரூமி சித்தாளின்
வேதனையைப் புலப்படுத்துகிறார் .
2.ஜெயகாந்தன்
தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று
அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் தர்க்கத்திற்கு
அப்பால் கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
தர்க்கத்திற்கு
அப்பால் - கதை மாந்தர் மூலம் விளக்குதல் –
மனிதம் என்பது
பரந்து விரிந்த வானம் போன்று எல்லைகளற்றது. இதை நம்மால் மேற்கொள்ள முடியாதென்று
ஒதுங்கிவிடக்கூடாது. தன்னால் இயன்ற சிறு உதவி, அன்பான சொல், ஆறுதலான புன்னகை, ஒரு
தோள்தட்டல் இவையாவும் மனிதத்தின் வெளிப்பாடுகளே.
தோல்வி
நிச்சயம் என்று எண்ணி தோற்றுப்போனால் அதுவும் வெற்றிதானே? என்ற மனப்பாங்குடன் படைக்கப்பட்ட கதை மாந்தர் ஒருவர், ஊருக்குச் செல்ல
வைத்திருந்த பன்னிரண்டணா போக கையிலிருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம் என்ற
சிந்தனை. கடைசிச்சல்லியையும் ஒரு ராஜாவைப்போல் செலவு செய் என்ற பழமொழி நினைவுக்கு
வந்தது.
ஐயா, தருமதுரை
கண்ணில்லாத பிச்சைக்காரன் ஐயா என்ற குரலில் கரைந்து தட்டில் கிடக்கும்
செப்புக்காசுகளுக்கு நடுவே மின்னுமாறு இரண்டணாவைப் போட்டார் அவர். புக்கிங்
கவுண்டரில் பயணச்சீட்டு எடுக்கக் காசை நீட்டியபோது இன்னும் ஓரணா கேட்டார் அலுவலர்.
நேற்றோடு முடிந்ததாம் பழைய கட்டணம். தற்போது புதுக்கட்டணம். பெரியவர் ஒருவரிடம்
உதவி கேட்கலாம் என்றால் முன்னொருவர் கேட்டதற்கு செவியிலறைந்தாற்போல் சொன்ன பதிலால்
இவர் தயங்கினார்.
நாம் போட்ட
காசு தானே, இரண்டணாவை எடுத்துவிடுவோம், ஓரணாவைப் போட்டுவிட்டு. அடப்பாவி, என்ற
அவன் குரல். யாரோ ஒரு புண்ணியவான் போட்ட இரண்டணாவை எடுக்கிறியே என்றது பரிதாபமாய்.
நரகத்துக்குத்தான் போகப்போகிறாய் என்று சாபம் வேறு. போட்ட ஓரணாவும் தற்போது பழைய
இரண்டணாவுடன் சேர்ந்து சிரித்தது. போக
வேண்டிய ரயில் வந்து போய்விட்டது.
தர்மத்தின்
பலன் அடுத்த ஸ்டேசன் வரை கால் வலிக்க நடந்தார். தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு கோர விபத்து,
அவர் தவறவிட்ட அந்த ரயில்தான்.
இந்த
விபத்திலிருந்து அவர் தப்பித்தது எப்படி? தர்மம் தலை காத்ததா? தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது இது!
3.எவையெல்லாம்
அறியேன் என்று கருணையன் கூறுகிறார் ?
· நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
·
நினைந்துகண்ட அறிவினுக்குப்
பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இவ்வுடலின் தன்மை அறியேன்.
·
உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக்
கொணரும் வழிவகைகளை அறியேன்.
·
காட்டில் செல்வதற்கான வழிகளையும்
அறியேன்.
4.கவிஞர் தாம்
கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
கவிஞர் தாம்
கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமையும் விதம் –
இலக்கணம் –
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின்மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது
தற்குறிப்பேற்ற அணி எனப்படும். தன்
+ குறிப்பு + ஏற்றம் + அணி – தற்குறிப்பேற்ற அணி.
எடுத்துக்காட்டு
–
போருழந்
தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல்
என்பனபோல் மறித்துக் கைகாட்ட
அணிப்பொருத்தம்
–
கதை
பொதிந்த தொடர்நிலைச்செய்யுள் வகை சார்ந்தது சிலப்பதிகாரம். பின்னர் நடக்க இருப்பதை
கவிஞர் ஏதேனும் ஒரு வகையில் முன்கூட்டியே தம் கருத்தை இயல்பாக நிகழும்
நிகழ்வின்மீது ஏற்றிக் கூறிவிடுகிறார்.
கோவலன்
மதுரையை ஆண்ட பாண்டியனால் தவறான தீர்ப்பு மூலம் கொலைக்களப்படவிருக்கிறான்.
இச்செய்தி அறிந்தே கோட்டை மதிலின் மேலிருந்த கொடிகள் கையை அசைத்து இம்மதுரைக்குள்
வரவேண்டா என்று தெரிவிப்பதுபோல் உள்ளதெனக் கூறுகிறார் இளங்கோவடிகள்.
Tuesday, August 24, 2021
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 8 சிறுவினா விடை 10th TAMIL UNIT 8 SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS
இயல் 8 சிறுவினா விடை 3 மதிப்பெண்கள்
1.சங்க
இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில
எடுத்துக்காட்டுகள் தருக.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்
அறத்தில் வணிக
நோக்கம் இல்லாமை, அரசியல் அறம், அறங்கூறவையம், போர்அறம், பிறர் துன்பத்தையும் தன்
துன்பமாகப்பார்த்தல், பசிப்பிணி மருத்துவம், வாய்மையே சிறந்த அறம்
மேற்கண்டவற்றை தமிழர் போற்றி வளர்த்த அறங்களாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
இன்றைக்கும்
தேவையே –
இப்பிறப்பில்
அறம் செய்தால் மறு பிறப்பில் அதன் பயனைப் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது என்று
புறநானூற்றில் முடமோசியார் கூறுகிறார். பிறரிடம் அன்பைப்பெற, ஆதரவைப்பெற,
புகழ்ச்சியைப்பெற, கடவுளிடம் அருளைப்பெற என்று எண்ணிச் செய்வது அறமாகாது.
அறம் அறக்கண்ட
நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி
கூறுகிறது. இவை இன்றைய நீதி மன்றங்களுக்கு ஒப்பானவை.
புறமுதுகிடுவோர்,
சிறார், முதியோர், பெண்டிர், நோயாளர் போன்றோருக்கு போரின்போது ஊறு செய்யக்கூடாது.
இந்நிலை மறந்து இன்று மனித இனம் அணுஆயுதம் ஏந்தி நிற்கிறது. இது அறம் அன்று.
செல்வத்துப்பயனே ஈதல். எனவே பெருங்கொடையாளர்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி வருகின்றனர். பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுகிறோம். இவ்விரக்க உணர்வு இருந்தால் மனிதநேயம் மலரும், பகை மாயும்.
பிழையறியா
நன்மொழி என்கிறது நற்றிணை. வாய்மையே வெல்லும் என்ற சொல்லை நம் அரசு சின்னத்தில்
வைத்துள்ளது. வாய்மையே சிறந்த அறம்.
2.ஆசிரியப்பாவின்
பொது இலக்கணத்தை எழுதுக.
ஆசிரியப்பாவின்
பொது இலக்கணம் –
§
அளவடிகளைப் (நான்கு சீர்) பெற்று
வரும்.
§
இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்)
பயின்றுவரும், பிறசீரும் வரும்.
§
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு
ஏற்ப அடிகள் அமையும்.
§
ஆசிரியத்தளை மிகுதியாக வரும், வெண்டளை,
கலித்தளை விரவியும் வரும்.
§
ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில்
முடித்தல் சிறப்பு.
§
அகவல் ஓசை பெற்று வரும்.
3.சுற்றுச்சூழலைப்
பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான
உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. குறிப்பு - சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச்
சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்.
சுற்றுச்சூழலைப்
பேணுவதே இன்றைய அறம் – உரைக்குறிப்பு
நிலம், நீர்,
காற்று, ஒலி, விண்வெளி மாசு, மட்கும், மட்காக்குப்பைக் கழிவுகள், இரசாயன உரங்கள்,
பூச்சிக்கொல்லிகள். சுத்தம் தெய்வீகத்திற்கு அடுத்தபடியாகும். கழிவுநீர் தேக்கம்,
கொசுக்களின் உற்பத்தி, ஆலைக்கழிவுநீர் சுத்திகரிப்பு, தொற்று நோய்கள் பரவல்,
தொழிற்சாலை, வாகனப்புகை, பட்டாசு வெடித்தல், வாகன, தொழிற்சாலைகளின் இரைச்சல்.
மனிதனின் சுயநலம், பசுமை இல்ல விளைவு, உயிர்க்கோளமாக நீடிக்க இயற்கை அழித்தல்
தடுப்பு, மரங்கள் இயற்கைத் தூய்மையாக்கிகள், உயிர்வளி உற்பத்தி. சுத்தம் உள்ள
இடமெங்கும் சுகமும் உண்டு நீ இதனை நித்த நித்தம் பேணுவையேல் நீண்ட ஆயுள் பெறுவாயே
– கவிமணி.
விண்கலம்,
செயற்கைக்கோள்கள் ஏவல், விண்வெளிக்குப்பைகள் – புவி வெப்பமயமாகும் ஆபத்து.
4)
வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை இச்சொற்களைத்
தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
நாங்கள் வசிக்கும் ஊரில் ஒரு பழம் பெருமையான அரசர்கள் வாழ்ந்த அரண்மனை
ஒன்று இருந்தது . அவ்வரண்மனை உயரமான அழகிய கட்டடங்கள் நிறைந்ததாக இருந்தது . ஆனால்
அறைகள் மிகவும் அழுக்காகவும் சுவர்களில் ஒட்டடை நிறைந்ததாகவும் காணப்பட்டது. எனவே
நானும் என் நண்பர்களும் எங்கள் ஊரில் உள்ள அரண்மனையைச் சுத்தமாக வைக்க எண்ணினோம் . வாளியில் தண்ணீர் எடுத்து வந்து அறைகளைச் சுத்தம் செய்தோம். சுவர்களில் இருந்த
அழுக்கைப் போக்க குவளையில் சாயம் கொண்டு வந்து சுவரினை அழகுபடுத்தினோம் .
கந்தைத்துணியை எடுத்து வந்து நாங்கள் அனைவரும் அறைகளில் உள்ள சன்னல்களையும், கதவுகளையும் சுத்தமாகத் துடைத்தோம். கட்டைத்தூரிகையை வைத்து சுவர்களில் உள்ள ஒட்டடைகளை அடித்து சுத்தம் செய்தோம். எங்கள் பணியினைக் கண்ட ஊர்த்தலைவர் எங்களைப் பாராட்டி இனிப்புகள் வழங்கினார்.
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 சிறுவினா விடை 10th TAMIL UNIT 7 SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS
இயல் 7 சிறுவினா விடை 3 மதிப்பெண்கள்
1)முதல்
மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவி பாடுகிறார் ?
·
முதல்
மழை விழுந்ததும், மேல்மண் பதம் ஆகி விட்டது. அதிகாலை வெள்ளி முளைத்துவிட்டது; விடியற்காலை ஆகி விட்டது நண்பா, விரைந்து காளைகளை
ஓட்டிச் செல் .
·
ஏழை
தொழுது, புலன் வழிபட்டு மாட்டைப் பூட்டி, காட்டை உழுவோம் .
·
ஏர்
புதிதல்ல, ஏறும் நுகத்தடி கண்டது; காடும் புதிதல்ல; கரையும் பிடித்தது தான்; கை புதிதல்ல; கார்மழையும் புதிதல்ல; நாள் புதிது; நட்சத்திரம் புதிது; ஊக்கம் புதிது ; வலிமை புதிது.
·
மாட்டைத்
தூண்டி எழுப்பி, கொழுவைப் பொருத்தினால் மண் புரண்டு, மழை பொழியும் .
நிலமும் சிலிர்த்துப் பிறகு நாற்றும் நிமிர்ந்து வரும் .
·
எல்லைத்
தெய்வம் எல்லாம் காக்கும்;
கவலையே இல்லை கிழக்கு வெளுக்குது; பொழுதேறப்
பொன் பரவும் ஏரடியில் நல்ல வேளையில் குழுவை நாட்டுவோம் என்று கு.ப. ரா. கவி
பாடுகிறார் .
2.அவந்தி
நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற
நினைக்கிறான், அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி
விளக்குக.
அவந்தி நாட்டு
மன்னன், மருதநாட்டு மன்னனுடன் தொடுக்கும் போர் - புறப்பொருள் வெண்பாமாலை
இலக்கணத்தின் வழி விளக்கம் –
o
அந்திப்பொழுது .. ஆநிரைகள் ஆவலுடன்
இல்லம் தேடி ஓடி வர, கோவலர்கள் களைத்த உடலுடன் உடன்வர அவந்தி நாட்டு வீரர்கள்
வெட்சிப்பூச்சூடி எதிர்ப்பட்டனர்.
o
ஆநிரைகளைக் கவர்ந்து அவந்தி நாட்டை
நோக்கி ஓட்டிச்சென்றனர். அகத்தியன்
o
உரமேறிய மருதநாட்டு மன்னன் சினந்தான்.
o
கரந்தைப்பூச்சூடிய தம் வீரர்களை புலர்காலைப் பொழுதில் ஏவி தம்
ஆநிரைகளை மீட்டுவர அவந்தி நாட்டுக்கு அனுப்பினான்.
o
தம் எண்ணம் நிறைவேறப் போகிறது என்ற
பேரவாவுடன் வஞ்சிப்பூச்சூடிய தம் வீரர்களை அனுப்பி அவந்தி நாட்டரசன் மருதநாட்டு
மண்ணைத் தனதாக்க நினைத்தான்.
o
ஆநிரை மீட்டுவந்த வேகத்தில் போர் முரசு
அறைந்து நாடி வரும் பகையைப் பொடி செய்து அனுப்ப மருதநாட்டு மன்னன் எதிர்போர்
புரிவதற்காகக் காஞ்சிப்பூச்சூடிய தம் வீரர்களைப் போர்க்களத்துக்கு அனுப்பினான்.
o
தம் கோட்டையைக் காக்கவேண்டிய
கட்டாயத்தில் மருதநாட்டு வீரர்கள் நொச்சிப்பூச்சூடி போரிட்டனர்.
o
மாற்றரசனாம் மருதநாட்டு வீரர்களின்
தாக்குதலை முறியடிக்க உழிஞைப்பூச்சூடிய அவந்திநாட்டு வீரர்கள் கோட்டை மதிலைச்
சுற்றி வளைத்தனர்.
o
பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது
என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப்பூச்சூடிப் போர்க்களத்தில் கடும்போர்
புரிந்தனர்.
3.தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்கம்
இடம் – ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன்
தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர். அதனை அறிந்த
முதல்வர் இராஜாஜி தம் பதவியையும் துறக்க முன்வந்தார். நீதிபதி வாஞ்சு தலைமையிலான
ஒருநபர் ஆணையம் செய்த பரிந்துரைக்கு எதிராக மாநகரத் தந்தை செங்கல்வராயன் சென்னை
மாநகராட்சிச் சிறப்புக் கூட்டத்தைக்கூட்டினார். சென்னை பற்றிய தீர்மானத்தை
முன்மொழிந்து ம.பொ.சிவஞானம் அவர்கள் முழங்கிய முழக்கம் இதுவாகும்.
விளக்கம் – ம.பொ.சி. அவர்கள் தலையைக் கொடுத்தேனும்
தலைநகரைக் காப்போம் என்று முழங்கினார். என்ன விலை கொடுத்தேனும் சென்னை ஆந்திர
மாநிலத்திற்குச் சொந்தமாக விடமாட்டோம் என்பது இதன் பொருளாகும். 25.03.1953 அன்று
பிரதமர் நேரு அவர்கள் வெளியிட்ட உறுதிமொழியால் சென்னை தமிழருக்கே என்பதும்
உறுதியானது.
4.பகர்வனர்
திரிதிரு நகரவீதியும்
பட்டினும்
மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு
நுண்வினைக் காருகர் இருக்கையும்
தூசும்
துகிரும் ஆரமும் அகிலும்
அ.இவ்வடிகள்
இடம்பெற்ற நூல் எது
?
இவ்வடிகள்
இடம் பெற்ற நூல் – சிலப்பதிகாரம். இந்திரவிழா
ஊரெடுத்த காதை
ஆ.பாடலில்
அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
முதலெழுத்து
ஒன்றிவரத் தொடுப்பது மோனை
பகர்வனர் - பட்டினும்
கட்டு - காருகர்
தூசும் -
துகிரும்
இ.எதுகைச்
சொற்களை அடிக்கோடிடுக.
இரண்டாமெழுத்து
ஒன்றிவரத் தொடுப்பது எதுகை
பகர்வனர்
- நகரவீதியும் பட்டினும்
- கட்டு
ஈ.காருகர் -
பொருள் தருக.
காருகர் -
நெய்பவர் (நெசவாளர்)
உ.இப்பாடலில்
காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை ?
இப்பாடலில்
காணப்படும் நறுமணப் பொருள்கள் – சந்தனம், அகில்.
5.பின்வரும்
பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.
பேரரசனது
மெய்ப் புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய
சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து
அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக்கூறி,
அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக்கூறி, பிறகே சாசனம் எழுந்த
நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.
சோழ மன்னர்
பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள்
இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி
காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை, ஏனைய பகுதிகள்
உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த
மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.
மையக்கருத்து
–
மெய்க்கீர்த்தி என்பது மன்னருடைய சாசனங்களில் தொடக்கத்தில் அமைக்கப் பெறும். அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும். முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது.
Monday, August 23, 2021
Sunday, August 22, 2021
Saturday, August 21, 2021
Friday, August 20, 2021
Thursday, August 19, 2021
Wednesday, August 18, 2021
Tuesday, August 17, 2021
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 திருக்குறள் சிறுவினா விடை 10th TAMIL UNIT 6 THIRUKURAL SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS
1.வள்ளுவம்,
சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி
விளக்குக.
வள்ளுவம்
கூறும் சிறந்த அமைச்சருக்குரிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்தும் விதம் –
தொழில்
செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை
ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.
உழவர் ஒருவர்
உழவுத் தொழிலுக்குத் தேவையான கலப்பை, மண்வெட்டி, கூடை, கடப்பாரை முதலிய கருவிகளைத்
தயார் நிலையில் வைப்பார். ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப நேர்த்தி
செய்யப்பட்ட விதைகள் இருக்கும். அகல உழுவதைவிட ஆழ உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில்
நெல்லுக்கு நண்டோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட இடைவெளி விட்டு நடுவார்,
பராமரிப்பார், அதிக விளைச்சல் காண்பார். இது பல்வேறு தொழில்களுக்கும் நம்
செயல்களுக்கும் பொருந்தும்.
மனவலிமை,
குடிகாத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும்
சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.
இவ்வைந்தும்
பெற்றவர் ஒரு சிறந்த குடும்பத்தலைவராக வாழ முடியும்.
இயற்கையான
நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகளும்
நிற்க இயலாது.
ஒரு செயலைச்
செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து
செயல்பட வேண்டும்.
ஏட்டுச்சுரைக்காய்
கறிக்கு உதவாது. உலகின் இன்றைய தேவை உணர்ந்து செயல்படும் வணிக நிறுவனம்
வெற்றிபெறும். மின்னணுப் பரிமாற்றம், இணையத்தளம் மூலம் வணிகம், பல்பொருள் அங்காடி,
விளம்பர உத்தி என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினால் வெற்றி எளிதில் கிட்டும்.
2.பலரிடம்
உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல
உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும்
நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை ?
தம்
நல்வாழ்வுக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அண்டாது வாழும் ஒருவற்கு வள்ளுவர்
கூறும் கருத்துகள் –
·
சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு
இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும் வலிமை இல்லாமலும் இருந்தால் அவரால் பகைவரின்
வலிமையை எதிர்கொள்ள இயலாது.
·
தம்மிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல்
என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்.
·
குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை
உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக்கொண்டு போற்றுவர்.
·
அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்பதறிந்து
வாழவேண்டும். ஊருணி நீர் நிறைந்தது போல நம் செல்வம் நல்ல உள்ளங்களுக்கும்
சுற்றங்களுக்கும் பயன்பட வேண்டும்.
தமிழ்த்துகள்
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் சிறார் திரைப்படம் டிசம்பர் சுவரொட்டி பெனோ ஜெபின்
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பருவம் 2 3.அலகு ...
-
10th tamil model notes of lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-01-2025 முதல் 03-01-2025 2.திருப்புதல் 1.‘வ...
-
8th Tamil half yearly exam question paper virudhunagar 2023
-
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் முன்னுரை இணையவழி விளையாட்டுகள் இந்த நவீன காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் மி...
Blog Archive
-
▼
2021
(1581)
-
▼
August
(123)
- புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகு...
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் மாதிரி பாடத்திட்டம் ...
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் மாதிரி பாடத்திட்டம் ...
- புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகு...
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒன்பதாம் வகுப்பு தமி...
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒன்பதாம் வகுப்பு தமி...
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பத்தாம் வகுப்பு தமிழ...
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பத்தாம் வகுப்பு தமிழ...
- ஒப்படைப்பு 2 பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு ...
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- 12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்...
- 11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்...
- எட்டாம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு 2 tamil 8th assig...
- பத்தாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டக...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு 3 tamil10th assig...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு 2 tamil10th assig...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு 2, 9th tamil ass...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 9 சிறுவினா விடை TENTH T...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 9 சிறுவினா விடை TENTH T...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஆகஸ்ட் அலகுத்தேர்வு இராணிப்ப...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 8 சிறுவினா விடை TENTH T...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 8 சிறுவினா விடை 10th TA...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 சிறுவினா விடை 10th TA...
- ஏழாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு ஆகஸ்ட் 2021 7th t...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 சிறுவினா விடை TENTH T...
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- நெகிழிக்கழிவுகளை ஒழிப்பதில் குடிமக்களின் பங்கு பேச...
- மயங்கொலிகள் ஆறாம் வகுப்பு தமிழ் இலக்கண வினாவிடை பர...
- ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் ஏழாம் வகுப்ப...
- கப்பலோட்டிய தமிழர் ஏழாம் வகுப்பு விரிவானம் வினாவிட...
- கப்பலோட்டிய தமிழர் ஏழாம் வகுப்பு விரிவானம் வினாவிட...
- வருமுன் காப்போம் எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 varu...
- நோயும் மருந்தும் எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 noyu...
- தலைக்குள் ஓர் உலகம் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம...
- தலைக்குள் ஓர் உலகம் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம...
- 2021, 22 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வகுப்பு 10 red...
- 2021, 22 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வகுப்பு 9 redu...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 திருக்குறள் சிறுவினா ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 சிறுவினா விடை 10th TA...
- 2021, 22 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வகுப்பு 6 redu...
- 2021, 22 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வகுப்பு 7 redu...
- 2021, 22 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வகுப்பு 8 redu...
- 2021, 22 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் தமிழ் வகுப்பு ...
- 2021, 22 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் தமிழ் வகுப்பு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மொழிப்பயிற்சி அலகுத்தேர்வு வ...
- தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் எட்டாம் வகுப்பு தமிழ...
- முதலெழுத்தும் சார்பெழுத்தும் 6ஆம் வகுப்பு தமிழ் இல...
- நால்வகைக் குறுக்கங்கள் 7ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்...
- வினைமுற்று 8ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் இயல் 2 செயல...
- சிறகின் ஓசை 6ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 செயல்பாட்டுத...
- விலங்குகள் உலகம் 7ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 செயல்பா...
- நிலம் பொது 8ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 செயல்பாட்டுத்...
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- HI TECH LAB BASIC ICT TRAINING MODULE PDF
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- இன எழுத்துகள் ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 ...
- ஆறாம் வகுப்பு தமிழ் திருக்குறள் இயல் 2 thirukural ...
- இலக்கியவகைச் சொற்கள் ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம் ...
- புத்திசாலி மீன் குட்டிக்கதை puthisali meen tamil k...
- வேற்றுமை எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணம் இயல் 4 வின...
- பத்தாம் வகுப்பு தமிழ் திருவள்ளூர் அலகுத்தேர்வு வின...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு ஈரோடு வினாத்தா...
- ஒன்பதாம் வகுப்பு ஒப்படைப்பு தமிழ் விடைக்குறிப்பு 9...
- ஆறாம் வகுப்பு ஒப்படைப்பு தமிழ் விடைக்குறிப்பு 6th ...
- எட்டாம் வகுப்பு ஒப்படைப்பு தமிழ் விடைக்குறிப்பு 8t...
- ஏழாம் வகுப்பு ஒப்படைப்பு தமிழ் விடைக்குறிப்பு 7th ...
- ஒப்படைப்பு பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு te...
- தன் விவரப் பட்டியல் நிரப்புதல் பத்தாம் வகுப்பு தமி...
- விளையாட்டு உறுப்பினர் படிவம் நிரப்புதல் பத்தாம் வக...
- 12 ஆம் வகுப்பு தமிழ் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க...
- மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பப் படிவம் நிரப்ப...
- 9ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 நீரின்றி அமையாது உலகு 9t...
- ஆறாம் வகுப்பு தமிழ் சிறகின் ஓசை 6th tamil siragin ...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஈரோடு அலகுத்தேர்வு வினாத்தாள...
- 12ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் 12th t...
- 11ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் 11th t...
- பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் 10th...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் 9th...
- எட்டாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் 8th ...
- ஏழாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் 7th ta...
- ஆறாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் 6th ta...
- நூலக உறுப்பினர் படிவம் நிரப்புதல் பத்தாம் வகுப்பு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6, திருக்குறள் சிறுவினா...
- தமிழில் நிறுத்தக்குறிகளின் பயன்பாடு விளக்கம் உதாரண...
- ஒப்படைப்பு 12ஆம் வகுப்பு தமிழ் ASSIGNMENT 12TH TAM...
- ஒப்படைப்பு 11ஆம் வகுப்பு தமிழ் ASSIGNMENT 11TH TAM...
- ஒப்படைப்பு பத்தாம் வகுப்பு தமிழ் ASSIGNMENT 10TH T...
- ஒப்படைப்பு ஒன்பதாம் வகுப்பு தமிழ் ASSIGNMENT 9TH T...
- ஒப்படைப்பு எட்டாம் வகுப்பு தமிழ் ASSIGNMENT 8TH TA...
- ஒப்படைப்பு ஏழாம் வகுப்பு தமிழ் ASSIGNMENT 7TH TAMI...
- ஒப்படைப்பு ஆறாம் வகுப்பு தமிழ் ASSIGNMENT 6TH TAMI...
- வெட்டுக்கிளியும் சருகுமானும் எட்டாம் வகுப்பு விரிவ...
- வெட்டுக்கிளியும் சருகுமானும் எட்டாம் வகுப்பு தமிழ்...
- பெரிய புராணம் 9ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 PERIYA PUR...
- +2 தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் திருப்பூர் 12ஆம் ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் செங்க...
- ஒளி பிறந்தது ஆறாம் வகுப்பு தமிழ் விரிவானம் பருவம் ...
- ஒளி பிறந்தது ஆறாம் வகுப்பு விரிவானம் பருவம்1 இயல் ...
-
▼
August
(123)