கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 20, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு விடுதலைத் திருநாள் ஜூலை 27 - 2026

7th tamil model notes of lesson

lesson plan 2026 july 27

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-07-2026 முதல் 31-07-2026

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

நாடு அதை நாடு - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

விடுதலைத் திருநாள்

6.பக்கஎண்

48-50

7.கற்றல் விளைவுகள்

T-716 மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும், பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல், சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிப்படுத்துதல்,

8.கற்றல் நோக்கங்கள்

தேசிய விழாக்களின் சிறப்பினை உணர்ந்து கொண்டாடுதல்.

9.நுண்திறன்கள்

தேசத்தை வழிபடும் பாடல் குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2022/11/7-8th-tamil-mindmap-unit-7_15.html  

https://tamilthugal.blogspot.com/2021/01/8th-tamil-viduthalai-thirunal-kuruvina.html 

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_95.html 

 11.ஆயத்தப்படுத்துதல்

நாடு வளம்பெற நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

விடுதலைத் திருநாளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசிரியர் விடுதலைத்திருநாள் பாடலை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் பாடலை வாசித்தல்.

நாட்டுப்பற்றின் அவசியம் பற்றி மாணவர்களைக் கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த தேசத்தலைவர்களைக் கூறச்செய்தல். விடுதலை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.

          பகத்சிங் குறித்து மாணவர்களுக்குக் கூறுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

தமிழரின் வீரம்  குறித்துக் கூறுதல். நாட்டுப் பற்று, தேசத் தலைவர்கள் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – வையம் என்பதன் பொருள் .....................................

          ந.சி.வி – பகத்சிங் கண்ட கனவு யாது?

          உ.சி.வி – விடுதலை நாளன்று மக்கள் செய்ய வேண்டியவைகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பகத்சிங் குறித்து இணையம் மூலம் மேலும் சில தகவல்களை அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive