6th Tamil Model Notes of Lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
27-11-2023 முதல் 02-12-2023
2.பருவம்
2
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
கூடித் தொழில் செய் – விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
உழைப்பே மூலதனம், சுட்டு எழுத்துகள், வினா
எழுத்துகள்
6.பக்கஎண்
61 - 69
7.கற்றல் விளைவுகள்
T-610 பல்வேறு
பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள்
போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதான கருத்துரைகளைப் பகர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.
T-620 பல
இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்
8.கற்றல் நோக்கங்கள்
தொழில் மூலம் அடையும் முன்னேற்றத்தை உணர்தல்.
சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகளைப்
பொருத்தமாகப் பயன்படுத்துதல்.
9.நுண்திறன்கள்
தொழிலின் மேன்மையை அறிந்துகொள்ள முயலும்
திறன்.
செய்தி, விளம்பரம், அறிவிப்பு, நிகழ்ச்சித்தொகுப்பு போன்றவற்றை
உருவாக்குதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_49.html
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_44.html
https://tamilthugal.blogspot.com/2018/10/qr-code-video-6.html
https://tamilthugal.blogspot.com/2020/06/8-ulaippey-uyarvu-8th-tamil-kattur.html
https://tamilthugal.blogspot.com/2021/10/2-tamil-ilakkanam-suttu.html
https://tamilthugal.blogspot.com/2020/06/6-2-3-suttu-ezhuthugal-vina-eluthukal.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2018/10/6-qr-code-video_27.html
https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3_28.html
https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3_36.html
11.ஆயத்தப்படுத்துதல்
வணிகத்தின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த உழைப்பின் பெருமை பற்றிய
கதையைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
வினாச் சொற்களைக் கூறச்செய்தல்.
உழைப்பு பற்றிக் கூறி, பாடப்பொருளை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
உழைப்பே மூலதனம் கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
சுட்டு
எழுத்துகள், வினா எழுத்துகள் குறித்து விளக்குதல்.
கதையின்
கதாப்பாத்திரங்களைப் பற்றி விவாதித்தல்.
மாணவர்கள்
தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசுதல்.
சுட்டு
எழுத்துகள், வினா எழுத்துகள் பயன்பாடு குறித்து மாணவர்கள் தங்கள் கருத்துகளைக்
கூறுதல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
உழைப்பின் அவசியத்தை மாணவர்களிடம் உணர்த்துதல். சுட்டு, வினா எழுத்துகளைப்
பயன்படுத்தித் தொடர்களை அமைத்தல்.
15.மதிப்பீடு
LOT – சுட்டு எழுத்துகள் என்றால் என்ன?
MOT – அகவினா, புறவினா – வேறுபடுத்துக.
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
HOT
– நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்த தொழில்கள் குறித்து
எழுதுக.
உழைப்பே
மூலதனம் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
உழைப்பு குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.
நீங்கள் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக.