கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, November 19, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழ் ஒளிர் இடங்கள், தொழிற்பெயர், திருக்குறள்

  7th Tamil Model Notes of Lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-12-2024 முதல் 06-12-2024

2.பருவம்

2

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கலை வண்ணம் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

தமிழ் ஒளிர் இடங்கள், தொழிற்பெயர், திருக்குறள்

6.பக்கஎண்

59 - 69

7.கற்றல் விளைவுகள்

T-701 வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில் கலந்துரையாடவும்  செய்தல்.

T-710 பாடப் பொருள் இன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடி கண்டறிதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழகச் சுற்றுலா இடங்களையும் அவை வெளிப்படுத்தும் கலை, பண்பாட்டுக் கூறுகளையும் படித்தறிதல்.

தொழிற்பெயரின் வகைகளை அறிந்து பயன்படுத்தல்.

9.நுண்திறன்கள்

தங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை எழுதுதல்.

செய்யுளைச் சீர் பிரித்துப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்



https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_22.html

https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-7th-tamil-mindmap-term-2-unit-3_28.html

https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-7th-tamil-mindmap-term-2-unit-3_5.html

https://tamilthugal.blogspot.com/2021/10/2-3-tholir-peyar-7th-tamil-ilakkanam-q.html

https://tamilthugal.blogspot.com/2020/06/7-2-3-7th-tamil-ilakanam-tholil-peyar.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த சுற்றுலா இடங்களைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த தொழிற்பெயர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

சுற்றுலா பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

தொழிற்பெயர்களை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், உ.வே.சா – கீழ்த்திசை – கன்னிமாரா நூலகங்கள் குறித்து விளக்குதல். வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை, மதுரை உலகத்தமிழ்ச் சங்கம், பூம்புகார் சிற்பக் கலைக்கூடம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். சுற்றுலா குறித்து விளக்குதல்.

          மாணவர்கள் சென்றுவந்த சுற்றுலா இடங்கள் குறித்துப் பேசுதல். தொழிற்பெயரை விளக்குதல். திருக்குறள்களைப் பொருளுடன் விளக்குதல்.

          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.





          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். சுற்றுலா குறித்து உணர்தல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

நம் மாவட்ட சுற்றுலா இடங்கள் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – முதனிலைத் தொழிற்பெயருக்கு உதாரணம் ..............................

          ந.சி.வி – முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன?

                   கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பற்றி எழுதுக.

உ.சி.வி – நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் பயன்படுத்தும் தொழிற்பெயர்களைப் பட்டியலிடுதல்.

உங்கள் மாவட்ட சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதுதல்.

தமிழ்த்துகள்

Blog Archive