7th Tamil second mid term exam answer key virudhunagar district november 2023
விருதுநகர் மாவட்டப் பொதுத்
தேர்வுகள்
இரண்டாம் இடைப்பருவத் தேர்வு நவம்பர்
2023
ஏழாம் வகுப்பு
தமிழ்
விடைக்குறிப்பு
பகுதி 1
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 5X1=5
1.இ.முந்நீர்
2.ஆ.42
3.இ.ஏடு+எடுத்தேன்
4.ஆ.கேடில்லாத
5.இ.பாரதியார்
3 வினாக்களுக்கு மட்டும் விடையளி 3X2=6
6. உலகம்
புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய் என அகநானூறு
கூறுகிறது.
7. எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான்,
நங்கூரம்.
8. பெயர் இயற்சொல்
வினை இயற்சொல்
இடை இயற்சொல்
உரி இயற்சொல்
9. பிறரால் கொள்ளப்படாது.
ஒருவருக்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது.
10. விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
கல்வி அறிவு இல்லாதவர்களை விலங்கு என்று வள்ளுவர் கூறுகிறார்.
ஒன்றனுக்கு மட்டும் விடையளி 1X4=4
11. காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையை
தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
கடலில் காற்று வீசும் திசை கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றை
தமிழர்கள் தம் பட்டறிவால் நன்கு அறிந்து அவற்றுக்கு ஏற்ப உரிய காலத்தில் சரியான
திசையில் கப்பலைச் செலுத்தினர்.
திசை காட்டும் கருவியைப் பயன்படுத்தியும் வானில் தோன்றும்
விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர்.
கப்பல் ஒட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவையும்
பெற்றிருந்தனர்.
கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும்
காலங்களையும் கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில்
கப்பல்களைச் செலுத்தினர்.
12. இந்த உலகத்தில் எல்லாச் செல்வமும் மறைந்துவிடும், அழிந்துவிடும்.
ஆலமரம், கட்டடம் போன்றவை காலத்தால் அழிந்து விடலாம்.
10 ஆண்டுகளுக்கு முன்னே இரண்டு லட்ச ரூபாய் வைத்திருந்தவர் இப்போது
இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்ற நிலை ஏற்படலாம்.
இது அனைத்தும் அழிகிற செல்வம்.
கல்வி அப்படிப்பட்டதன்று.
அதோ போகிறாரே அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னே பட்டம்
பெற்றிருந்தார்.
இப்போது எல்லாம் செலவாகிப்போய் வெறும் பத்தாம் வகுப்பு ஆகிவிட்டார்
என்று சொல்ல மாட்டோம்.
ஏனென்றால் கல்வி அழியாதது.
மனப்பாடப்பகுதி 4
13. கலங்கரை
விளக்கம்
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை
- கடியலூர்
உருத்திரங் கண்ணனார்.
3 வினாக்களுக்கு மட்டும் விடையளி 3X2=6
14.அ. கலங்கரை
விளக்கம்
ஆ. நீதி
15.அ. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்
ஆ. அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்
16. அ. தீ
ஆ. ஈ
17.அ. நீ
ஆ. உன்
விடையளி 5
18.அ. நூலகம் வேண்டி கடிதம்
அல்லது
ஆ.ஆழ்கடலின் அடியில்
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்