கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, November 13, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பேசும் ஓவியங்கள்

7th Tamil model notes of Lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

25-11-2024 முதல் 29-11-2024

2.பருவம்

2

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கலை வண்ணம் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

பேசும் ஓவியங்கள்

6.பக்கஎண்

53 - 58

7.கற்றல் விளைவுகள்

T-701 வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில் கலந்துரையாடவும்  செய்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

ஓவியக்கலையின் மேன்மையையும் அது மனித வாழ்வோடு இணைந்துள்ள நுட்பத்தையும் உணர்ந்து போற்றுதல்.

9.நுண்திறன்கள்

பொருள்காட்சிக் கூடங்கள் பற்றி கலந்துரையாடல்.

தாம் கண்டுகளித்த ஒவியங்கள் சிற்பங்களைப் பற்றி பேசுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_9.html

தமிழ்த்துகள்: ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 3 பேசும் ஓவியங்கள் மனவரைபடம் 7th tamil mindmap term 2 unit 3 (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: பேசும் ஓவியங்கள் 7ஆம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவம் 2 குறுவினா 7TH PESUM OVIYANGAL KURUVINA VIDAI (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஓவியத்தைக் குறிக்கும் சொற்கள் OVIYAM TAMIL WORDS OF DRAWING (tamilthugal.blogspot.com)

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த கலைகளைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த ஓவிய வகைகளைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

ஓவியம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          குகை ஓவியம், சுவர் ஓவியம், துணி ஓவியம் குறித்து விளக்குதல். கலையை உணர்தல். தமிழர்களின் ஓவியக்கலையை உணர்த்துதல்.

ஓலைச்சுவடி ஓவியம், செப்பேட்டு ஓவியம், தந்த ஓவியம், கண்ணாடி ஓவியம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

தாள் ஓவியம், கருத்துப்படம், நவீன ஓவியம் குறித்து விளக்குதல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். ஓவியக்கலையை உணர்தல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

ஓவிய வகைகளை அறியச் செய்தல். ஓவியக்கலைகள் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ..............................

                   கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் ....................................

          ந.சி.வி – ஓவியங்களின் வகைகள் யாவை?

                   கேலிச்சித்திரம் பற்றி எழுதுக.

உ.சி.வி – தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பென்சில் ஓவியம் வரைந்து வருதல்.

இயற்கைக் காட்சி வரைந்து வருதல்.

தமிழ்த்துகள்

Blog Archive