கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, November 27, 2023

நான் விரும்பிய பாரதியாரின் கவிதை தமிழ்ப் பேச்சு கட்டுரை

Bharati's poem which I love

Naan Virumbiya Barathiyarin Kavithai Tamil Speech Essay Pechu Katturai competition

 

நான் விரும்பிய பாரதியின் கவிதை

ஆலமரமாய் வீற்றிருக்கும் அவைத் தலைவர் அவர்களே! விழுதுகளாய்த் தாங்கி நிற்கும் நடுவர் பெருமக்களே! நல்லாசிரியர்களே! கல்விச்சோலையில் அன்றலர்ந்த மலர்களாய் என்னோடு அமர்ந்திருக்கும் அருமை உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் அடியவனின் அன்பு வணக்கம்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றான் முண்டாசுக்கவி பாரதி. அந்த எட்டயபுரத்தில் பற்றிக் கொண்ட தமிழ்த்தீ ஆங்கிலேயரை ஓட ஓட விரட்டியது. இவன் எழுதிய எழுத்தின் வேகத்தில் தீண்டாமைத் தீ அணைந்தது. பாரதியின் கவிதைக்கரும்பு கட்டாயம் இனிக்கும். எந்தக் கரும்பு இனிக்கும் என்று கேட்டால் அது அறியாமை. நான் கையில் எடுத்த கரும்பு இனித்தது. எனக்குப் பிடித்த பாரதியின் கவிதையை அதன் சுவையை என் அளவில் எடுத்துரைக்கிறேன். செவிகளைச் சற்று நேரம் தாருங்கள்!    தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாப்பாவுக்குப் பாட்டுச் சொன்னான் பாரதி. தன்னைத்தானே கேள்வி கேட்டு சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் தன் வலிமையைத் தன் பிறப்பின் உண்மையை வெளிப்படுத்திய பாடல் தான் நான் படித்ததில் பிடித்த பாடல் இதோ...                                      தமிழ்த்துகள்

தேடிச் சோறு நிதந் தின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

வாடித் துன்பம் மிக உழன்று

 பிறர் வாடச் செயல்கள் பல செய்து தமிழ்த்துகள்

நரை கூடிக் கிழப்பருவமெய்திக்

கொடுங் கூற்றுக்கிறையான பின் மாயும் தமிழ்த்துகள்

வேடிக்கை மனிதரைப் போலே

நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? என்ற பாடல்              தமிழ்த்துகள்

நிலையாமையைத் தன் பாடலில் உணர்த்தியவன் பாரதி. காணி நிலம் வேண்டும் என்று இறைவனிடம் கோரிக்கை விடுத்தவன் பாரதி. மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் என்று விருப்பப்பட்டவன் பாரதி. அப்படிப்பட்ட பாரதிக்குள்ளே ஆறாம் அறிவோடு பிறந்த இந்த மனித பிறப்பு பொருள் உள்ள பிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமலா இருந்திருக்கும் ?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன்                தமிழ்த்துகள்

கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் என்று பௌத்தம் பேசியவனை இங்கே சற்று நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

ஈ என இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்தமிழ்த்துகள்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று என்று புறநானூறு பாடல் ஒன்றில் கழைதின் யானையார் குறிப்பிட்டுள்ளார். மனிதன் வாழ்வது எதற்காக ஒரு சாண் வயிற்றுக்காக என்று நாம் உலக வழக்கில் கூறுவது உண்டு. தமிழ்த்துகள்

தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி என்று கூறும் போது தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத இயல்பான வாழ்க்கை வாழ்கின்ற மனிதனைப் பாரதி சுட்டிக்காட்டுகிறார். மனிதன் முயற்சி இல்லாமல் பேசிப் பேசியே பொழுதைக் கழிப்பதை வெறுக்கிறார். அவ்வாறு இருக்கக்கூடிய மனிதனை வறுமை வாட்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

முயற்சி திருவினையாக்கும், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று வள்ளுவர் சொல்வதை நாம் அறிவோம். முயற்சி இல்லாதவன் வீட்டில் வறுமை குடியிருக்கும். அதனால் தான் வாடித் துன்பம் மிக உழன்று என்று கூறி இருக்கிறார் பாரதி. தமிழ்த்துகள்

ஒருவருடைய சொல்லும் செயலும் பிறரைப் பாதிக்காமல் இருந்தால் அவனை அந்தணர் என்று விளக்கம் கொடுக்கிறார் திருவள்ளுவர்                        தமிழ்த்துகள்

அந்தணர் என்போர் அறவோர் எவ்வுயிர்க்கும்

செந்தன்மை பூண்டொழுகலான்-என்பது திருக்குறள். மனிதன் பிறர் வாட பல செயல்கள் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளான். அதுதான் அவனுக்கு வேடிக்கையாகவும் இருக்கிறது.

தன் பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவை உண்டு தான் உண்டு என்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன் என்று பாவேந்தர் கூறுவதை நாம் அறிவோம் இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கை ஓட்டத்தில் முதுமை என்னும் பருவமடையும் போது தான் அவனுக்கு உள்ளே இருக்கும் ஆன்மீகம் விழித்துக் கொள்கிறது. தமிழ்த்துகள்

இறை உணர்வு பொங்கி வருகிறது. எதுவும் நம் கையில் இல்லை என்ற எண்ணம் மேலோங்குகிறது. குருதி ஓட்டம் வேகத்தோடு இருந்தபோது இளமைத் துடிப்பில் செய்த பாவங்களை எல்லாம் கணக்குப் போடுகிறது. தமிழ்த்துகள்

நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் என்று கரிகால் பெருவளத்தானை பழமொழி நானூறு புகழ்கிறது. இமயவரம்பினில் மீன் கொடி ஏற்றி இசைப்பட வாழ்ந்த பாண்டியரை இன்னும் நாம் புகழ்கிறோம். கற்றளி எடுத்து கடற் படை நடத்திய இராஜ ராஜனையும் இராஜேந்திர சோழனையும் இன்னும் நினைத்துப் பார்த்துப் பெருமைப்படுகிறோம். கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவர்களைப் புகழ்கிறோம். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

செயற்கரிய செய்வார் பெரியார் என்கிறார் பொய்யாமொழிப் புலவர். தமிழ்த்துகள்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று இன்றைய கவிஞர்கள் எழுதிவிட்டனர். நரை கூடிய கிழப்பருவம் வந்தபின் வருகின்ற ஞானம் இளமையில் வருவதில்லை. ஆனால் இளம் வயதிலேயே பாரதியின் நாவில் நாமகளாம் சரஸ்வதி குடிகொண்டு விட்டாள். அதனால் தான் சுப்பிரமணியாய் இருந்தவன் பாரதியாக மாறினான். தமிழ்த்துகள்

மெய்ப்பொருள் காணும் ஞானியாக காசியில் நடமாடித் திரிந்திருக்கிறான். பெண்ணை மதிக்க வேண்டும் என்று சகோதரி நிவேதிதையைச் சந்தித்த பிறகு அவனுக்குள் எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். தமிழ்த்துகள்

இவ்வளவு நாள் நான் என் மனைவியைக் கூட மதித்ததில்லையே! சமுதாயத்தில் சம உரிமை கொடுத்து பெண்ணை நடத்த வேண்டும் என்று போர்க் குரல் எழுப்பினான். அதனால்தான்

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்தமிழ்த்துகள்

இளைப்பில்லை காணென்று கும்மி அடிக்கச் சொன்னான். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறுதியில் ஒரு நாள் இறைவனடி சேரத்தான் போகிறோம்.அதனால் தான் கொடுங்கூற்றுக்கு இரையான பின் மாயும் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். மனித வாழ்வு அர்த்தமற்றதாகப் போய்விட்டால் அது வேடிக்கையாக இருக்கும். தமிழ்த்துகள்

பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்பதில் பாரதி தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவன். அதனால் தான் அவனுடைய இந்தக் கவிதையும் என்னைச் செதுக்குவதாக அமைந்துவிட்டது. தமிழ்த்துகள்

காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததைப் பாட்டுக்குள் வைத்தவன் பாரதி அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனவன் பாரதிதாசன். நான் மட்டும் என்ன விதிவிலக்கா? உளம் மகிழப் பகிர்ந்தேன், உள்ளம் குளிர்ந்தேன். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்தமிழ்த்துகள்

வாழிய பாரத மணித்திருநாடு. வாய்ப்புக்கு நன்றி வருகிறேன், விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். தமிழ்த்துகள்

          கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive