கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, November 12, 2023

குழந்தைகள் நாள் விழா தமிழ்ப் பேச்சு, கட்டுரை children's day tamil speech essay katturai

 

குழந்தைகள் நாள் விழா

ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பெருமக்களே

அறிவுக்கண் திறக்கும் ஆசிரியப் பெருமக்களே             தமிழ்த்துகள்

என் உடன்பிறவா சகோதர சகோதரிகளே!

உங்கள் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் திருநாள் வணக்கங்கள்!

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று, தமிழ்த்துகள்

ஆம்! பிள்ளைச் செல்வங்கள் அவை பேசும் தெய்வங்கள். நாளைய உலகின் தூண்கள். பூக்களுக்கும் புன்னகையைச் சொல்லித் தரும் இள மொட்டுகள்! ஒவ்வொரு நாளும் போராட்டமாய் இருக்கும் வாழ்க்கையைப் பூந்தோட்டமாய் மாற்றும் வண்ண மலர்கள்.            தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

அதனால்தான் உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ்த்துகள்

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர் என்று கூறுகிறது.

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வார்கள் பிஞ்சுக் குழந்தைகள். மழலை மொழியைக் கேட்டுக் கிறங்கிப் போகாதவர்கள் இவ்வுலகில் எவரேனும் உண்டா? இல்லை.

அந்தக் கள்ளமில்லாச் சிரிப்பில் கடவுளைக் காணலாம்!             தமிழ்த்துகள்

அது சரி குழந்தைகள் நாள் என்று எப்போது கொண்டாடத் தொடங்கினோம் என்று தெரியுமா உங்களுக்கு?

1954 ஆம் ஆண்டு நவம்பர் 20 முதல் ஐக்கிய நாட்டு நிறுவனம் குழந்தைகள் நாளைக் கொண்டாட ஆணையிட்டது!               தமிழ்த்துகள்

இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை நாம் குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம். 1964 ஆம் ஆண்டு நேரு அவர்கள் மறைந்த பிறகு நவம்பர் 14ஆம் நாளை குழந்தைகள் நாளாக நாம் கொண்டாடி வருகிறோம். ஆம் அன்றுதான் அவர் பிறந்தநாள்.

ரோஜாவின் ராஜா, மனிதருள் மாணிக்கம், சமாதானப் புறா என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது கொள்ளை விருப்பம் கொண்டவர் அவர்களோடு தானும் ஒரு குழந்தையாய் மாறி விளையாடுவாராம். மிகப்பெரிய செல்வந்தர், மிகப்பெரிய பதவியில் இருந்தவர், தன்னை மறந்து பிள்ளைகளின் அன்பை உணர்ந்து விளையாடுவதை அனைவரும் கண்டு மகிழ்வார்களாம். தமிழ்த்துகள்

மனம் மிகுந்த ரோஜாப் பூவைத் தன் ஆடையில் அணிந்து கொள்ள விரும்பும் நேரு அவர்கள் பிள்ளைகளின் அன்பையும் இதயத்தில் பதித்திருக்கிறார். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

வாடியே நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து

தேடியே நான் கண்ட செல்வமாய் வந்தவனே ! தமிழ்த்துகள்

மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்

தாய் என்ற பெருமைதனை மனம் குளிரத் தந்தவனே !

என்று தாலாட்டில் தாய் பாடி மகிழும் பாடலை நாம் கேட்டிருக்கிறோம்! தமிழ் இலக்கியங்களில் 'பிள்ளைத்தமிழ்' என்று பத்துப் பருவங்கள் அமைத்து பிள்ளைத்தமிழ் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.

"அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்                        தமிழ்த்துகள்

சிறுகை அளாவிய கூழ்" என்ற குறளில் பிள்ளைகள் கையால் பெறப்படும் உணவின் சுவையைக் கூறி இருக்கிறார் வள்ளுவர். இன்றைய புதுக்கவிதைகளிலும் பிள்ளைகள் கொண்டாடப்படுகிறார்கள்.

புத்தகங்களே சமர்த்தாய் இருங்கள்!                                       தமிழ்த்துகள்

பிள்ளைகளைக் கிழித்து விடாதீர்கள்!

என்று மென்மைமிகு உள்ளம் கொண்ட குழந்தைகளின் கற்பனை உலகத்தை மாற்றி விடாதீர்கள் என்று எச்சரிக்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். இளமையில் கல்வி என்பதை வலியுறுத்த வந்த பாவேந்தர் தமிழ்த்துகள்

"மலை வாழை அல்லவோ கல்வி வாயார உண்ணுவாய் போ என் புதல்வி" என்கிறார்!

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

முண்டாசுக்கவி பாரதியாரோ ஒரு படி மேலே சென்று

"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ தமிழ்த்துகள்

பயம் கொள்ளலாகாது பாப்பா

மோதி மிதித்து விடு பாப்பா அவர்

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!" என்று பிள்ளைகளைத் தவறாகக் கையாள நினைக்கும் எத்தர்களுக்குப் பாடம் புகட்டச் சொல்லுகிறார். பாரதியின் பாப்பாப் பாட்டு அறியாதவர் தமிழராய் இருக்க முடியுமா என்ன?                தமிழ்த்துகள்

ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளைக் கொண்டாட வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் உண்மையான செல்வங்கள் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால்தான் 'பிள்ளைப் பேறு என்கிறோம். பேறு என்றால் செல்வம் என்று தானே பொருள்? தமிழ்த்துகள்

ஏவுகணை நாயகன், உப்புக்காற்றை உறிஞ்சி வளர்ந்த அக்னிச் சிறகுகள் எழுதிய அப்துல் கலாம், பள்ளிப் பிள்ளைகளோடு உரையாடுவதில் பெருமகிழ்வு கொண்டவர்.

அன்னையால் ஈன்றெடுக்கப்பட்டு, தந்தையால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, ஆசிரியரால் கல்வி புகட்டப்பட்டு, வீட்டில் வளரும் தெய்வம் தான் குழந்தை.           தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

இன்றைய குழந்தைகள் பிறக்கும்போதே பேரறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கைகளில் எதிர்காலம் இருப்பது தெரியாமல் ஊடகங்களில் பொழுதைக் கழிக்கிறார்கள்! இந்நிலை மாற வேண்டும்! ஏனென்றால் நாளைய உலகிற்குப் புதிய பாதை வகுக்கும் பொறியாளர்கள் இவர்கள்!

ஆணும் பெண்ணும் சரி நிகர் என நினைக்கும் குழந்தைகளாய், சாதி மத இனமொழி வேறுபாடு கருதாது ஒன்றுபட்டவர்களாய், இன்றைய பிள்ளைகள் வளர வேண்டும்!          தமிழ்த்துகள்

புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி ஒவ்வொரு விழாக்களையும் கொண்டாடுகிறோம். குழந்தைகள் நாளான இன்றும் அவர்களைக் கொண்டாடுவோம்!

ஏனென்றால் குழந்தைப் பருவம் ஒரு மனிதனுக்கு மீண்டும் வராது!                தமிழ்த்துகள்

நேரு மாமா என்று அன்போடு பிள்ளைகள் அழைத்ததனால் குழந்தைகள் நாள் கொண்டாட வேண்டும் என்று தன் விருப்பத்தைச் சொன்னார் ஜவஹர்லால் நேரு.

பேச்சு, கட்டுரை, ஓவியம், இசை என்று ஒவ்வொரு துறையிலும் தன்னிகரற்று விளங்கும் குழந்தைச் செல்வங்களைக் கொண்டாடுவோம், அவர்களின் புன்னகையில் பூக்களின் மொழி அறிவோம், வாய்ப்புக்கு நன்றி, வருகிறேன், விடைபெறுகிறேன்!      தமிழ்த்துகள்

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive