10th Tamil model notes of Lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
25-11-2024 முதல் 29-11-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
9
4.பாடத்தலைப்பு
அன்பின் மொழி – கவிதைப்பேழை.
5.உட்பாடத்தலைப்பு
சித்தாளு,
தேம்பாவணி.
6.பக்கஎண்
211 - 215
7.கற்றல் விளைவுகள்
T-1046 வெவ்வேறு தளங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைப் பதிவுகளை
இலக்கியம் மூலம் படித்தல், அது போல படைத்தல்.
T-1047 மனித மாண்புகளையும் விழுமியங்களையும் உட்பொருளாகக் கொண்ட
பிற்காலக் காப்பிய இலக்கியத்தைப் படித்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
விளிம்பு நிலை
மக்களின வாழ்க்கை பற்றிக் கூறும் பல்வேறு படைப்புகளை படித்தல்.
9.நுண்திறன்கள்
தேம்பாவணி
உணர்த்தும் தாயின் அன்பு பற்றி செய்யுள் பாடப்பகுதி மூலம் படித்தறிதல்.
எளிய
புதுக்கவிதைகளைப் படைத்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/07/9-10th-tamil-online-test-sithalu-one.html
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_50.html
https://tamilthugal.blogspot.com/2019/05/thembaavani.html
https://tamilthugal.blogspot.com/2019/05/mp3-song_80.html
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_63.html
https://tamilthugal.blogspot.com/2021/07/9-10th-tamil-online-test-thembavani-one.html
https://tamilthugal.blogspot.com/2020/11/10th-tamil-thembavani.html
11.ஆயத்தப்படுத்துதல்
சித்தாளு
பற்றிக் கூறச் செய்தல்.
வீரமாமுனிவர்
குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கேட்டல்.
12.அறிமுகம்
நாகூர்ரூமி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
தேம்பாவணியின் முன்நிகழ்வைக் கூறுதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
நாகூர்ரூமி குறித்து விளக்குதல்.
சித்தாளு வாழ்க்கை குறித்து
மாணவர்களுடன் கலந்துரையாடுதல். கவிதை குறித்து மாணவர்கள் பேசுதல். இலக்கிய
வடிவங்களை அறிதல்.
தேம்பாவணி பாடலை விளக்குதல். இயற்கையின் பரிவை உணர்தல்.
மாணவர்களிடம் படைப்பாற்றலை உருவாக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தேம்பாவணி குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கான் என்பதன்
பொருள் ................
ந.சி.வி – தேம்பாவணி – நூல்
குறிப்பு எழுதுக.
உ.சி.வி – சித்தாளு குறித்து கவிதை ஒன்று எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
வீரமாமுனிவர் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.
புதுக்கவிதை எழுத முயலுதல்.