எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
25-11-2024 முதல் 29-11-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
பாருக்குள்ளே நல்ல
நாடு – உரைநடை உலகம்.
5.உட்பாடத்தலைப்பு
பாரத ரத்னா
எம்.ஜி.இராமச்சந்திரன்
6.பக்கஎண்
150 - 154
7.கற்றல் விளைவுகள்
T-805 எதையும் படித்து முடித்த பின்னர் தமக்குத் தெரியாத
சூழல்கள் / நிகழ்வுகள் பற்றிக் கற்பனை செய்து புதிய மனப்பிம்பங்களையும்
சிந்தனைகளையும் உருவாக்கி வெளிப்படுத்துதல். (வாய்மொழி வழி / சைகை மொழியில்)
8.கற்றல் நோக்கங்கள்
நாட்டுக்கு உழைத்த
நல்லோரின் வாழ்க்கையை அறிந்து பின்பற்றுதல்.
9.நுண்திறன்கள்
ஆளுமை
பண்புமிக்கோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை நூலக உதவியுடன் படித்தல்.
பாடப்பகுதியை
உரையாடலாக மாற்றி எழுதுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_30.html
https://tamilthugal.blogspot.com/2022/01/8th-tamil-mgr-live-worksheet.html
https://tamilthugal.blogspot.com/2022/11/7-8th-tamil-mindmap-unit-7_20.html
https://tamilthugal.blogspot.com/2021/01/7-8th-tamil-mgr.html
https://tamilthugal.blogspot.com/2022/02/8th-tamil-mgr-online-quiz-one-word-exam.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
தமிழக முதல்வர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
எம்.ஜி.ஆர்.
குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
எம்.ஜி.இராமச்சந்திரன் குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடல். இளமைப்பருவம், நடிப்பு, பன்முகத் திறமை, பொன்மனச் செம்மல், சமூக
நலத்திட்டங்கள், தமிழ்வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்குதல்.
தலைமைப் பண்பு குறித்து அறிதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
எம்.ஜி.இராமச்சந்திரன் குறித்து மேலும் சில தகவல்களைக்
கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – ஐந்தாம் உலகத்தமிழ்
மாநாடு நடைபெற்ற இடம் ..............................
எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத்
தேடித் தந்த திட்டம் .....................................
ந.சி.வி – எம்.ஜி.ஆர்.
நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?
உ.சி.வி – சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
எம்.ஜி.ஆர் குறித்து இணையம் மூலம் அறிதல்.