6th Tamil Model Notes Of Lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
20-01-2025 - 24-01-2025
2.பருவம்
3
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
புதுமைகள் செய்யும் தேசமிது – விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
வேலுநாச்சியார்
6.பக்கஎண்
9 - 12
7.கற்றல் விளைவுகள்
T-610 பல்வேறு பாடப்பொருள்கள்
பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ
இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல்
தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின் மீதான கருத்துரைகளைப் பகிர்தல், தங்களின்
விருப்புவெறுப்புகளை வெளிப்படுத்துதல்.
8.கற்றல் நோக்கங்கள்
விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கினை
அறிந்து போற்றுதல்.
9.நுண்திறன்கள்
வேலுநாச்சியார், குயிலி, உடையாள் குறித்து
அறியும் திறன்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
https://tamilthugal.blogspot.com/2023/01/velu-nachiyar-drama-by-govt-school-6th.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-velunachiyaar.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-qr-code-video.html
https://tamilthugal.blogspot.com/2020/07/velu-nachiyar-6th-tamil.html
https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_11.html
https://tamilthugal.blogspot.com/2022/08/velu-nachiyar-independence-day-speech.html
11.ஆயத்தப்படுத்துதல்
தேசத்தலைவர்கள் குறித்துக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த விடுதலைப் போராட்ட
வீரர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழ்நாட்டின் பெருமையைக் கூறுதல்.
வேலுநாச்சியார் பற்றிக் கூறி, பாடப்பொருளை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
வேலுநாச்சியாரின் வீரம் குறித்துக் கூறுதல். குயிலி, உடையாளின் தியாகம்
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
நடுகல்
குறித்து விளக்குதல்.
சிவகங்கைப்
போராட்டம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். தமிழர் குறித்தும் விடுதலைப்
போராட்டம் குறித்தும் மாணவர்களின் தகவல்களைக் கேட்டல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
தமிழரின் வீரத்தை மாணவர்களிடம் உணர்த்துதல். வேலுநாச்சியார் பற்றி அறியச்
செய்தல். சிவகங்கை குறித்து அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – மைசூரிலிருந்து படையை அனுப்பியவர் ...........................
ந.சி.வி – வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வைச் சுருக்கமாக எழுதுக.
உ.சி.வி – தமிழக விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயர்களை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் எளிமையாக பாடப்பொருளை மீண்டும் விளக்குதல்.
17.தொடர்பணி
சிவகங்கை குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.
வேலுநாச்சியார் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.