கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 15, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 23

9th tamil model notes of lesson

lesson plan February 23

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-02-2026 முதல் 27-02-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

முழு ஆண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

4.திருப்புதல் வினாக்கள்

எண்ணுப்பெயர், திசைப்பெயர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் எழுதுக.

அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.

சொற்பொருள் பின்வருநிலை அணியை விளக்குக.                

பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.  

இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.

பள்ளி நேரம் முடிவதற்கு முன்பு வீட்டிற்குச் செல்ல அனுமதி வேண்டி விண்ணப்பம் எழுதுக.

வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.

நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

தாய்மைக்கு வறட்சி இல்லை என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.                            

தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக. 

கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

நடுகல் என்றால் என்ன?

நிலையான வானத்தில், தோன்றி மறையும் காட்சியைப் பெரியபுராணம் எதனுடன் ஒப்பிடுகிறது?

தென்திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக.

அன்பு – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக

தமிழ்த்துகள்

Blog Archive