கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 22, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 2

9th tamil model notes of lesson

lesson plan March 2

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-03-2026 முதல் 06-03-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

முழு ஆண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

4.திருப்புதல் வினாக்கள்

விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.         

அ. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ‘சிற்பச்செந்நூல்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது.

ஆ. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக்.

கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

நடுகல் என்றால் என்ன?

நிலையான வானத்தில், தோன்றி மறையும் காட்சியைப் பெரியபுராணம் எதனுடன் ஒப்பிடுகிறது?

 தென்திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக.

 அன்பு – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.                

காலவாகுபெயர் – குறிப்பு தருக.

பொருள் எழுதித் தொடரமைக்க.

அ. வாளை, வாழை                                ஆ. மரை, மறை                                   

கொடு என்பது முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமையுமாறு தொடர்கள் எழுதுக.

படிப்போம்; பயன்படுத்துவோம்!                          

அ Volunteer                                          ஆ Archaeology

இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் விளக்குக.             

மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க.         

அ. கிணற்றுத்தவளை                           ஆ. உடும்புப்பிடி            

 கொடுத்தாய் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.             

அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.        

நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப் பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.

தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.

தோழியை எழுப்பும் நிகழ்வைத் திருவெம்பாவை எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?

அடிபிறழாமல் எழுதுக.                          

காடெல்லாம் எனத்தொடங்கும் பெரிய புராணம் மனப்பாடப் பாடல்                  

ஒன்றறிவதுவே எனத்தொடங்கும் உயிர்வகை மனப்பாடப் பாடல்

எண்ணுப்பெயர், திசைப்பெயர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் எழுதுக.

 அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.

சொற்பொருள் பின்வருநிலை அணியை விளக்குக.                

தமிழ்த்துகள்

Blog Archive