கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, February 17, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-02-2026. செவ்வாய்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

17-02-2026. செவ்வாய்

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : தெரிந்து வினையாடல் ;

குறள் எண்: 511.

குறள் :

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

உரை :

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

பழமொழி :

> தாமதம் தாழ்வுக்கு வழி வகுக்கும்.

Delay is dangerous.

இரண்டொழுக்க பண்புகள்:

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

எழுவதற்கே வீழ்ச்சி ; வெல்வதற்கே தோல்வி ;

விழிப்பதற்கே தூக்கம் -பிரெளனிங்.

பொது அறிவு:

01. ஆசியாவில் விளையாட்டுக்குப் பிரபலமான மற்றும் முதன்மையான நாடாக கருதப்படும் நாடு எது?

சீனா -China

02. இந்திய கரன்சி நோட்டுகளில் கையெழுத்திட்ட ஒரே இந்தியப் பிரதமர் யார்?

டாக்டர் மன்மோகன் சிங்

Dr. Manmohan singh

English words:

Educate to teach someone to gain knowledge

Aberrant - unusual

தமிழ் இலக்கணம் :

இன்று நாம் அறியாமலே செய்யும் சில வாக்கியப் பிழைகளைப் பார்ப்போம்

1. சில மீன்கள் இறந்து கடற்கரை ஓரத்தில் கிடந்தன தவறு - கடற்கரை என்றாலே கடல் ஓரம் தான். எனவே கடற்கரை ஓரம் என்று எழுதாமல் சில மீன்கள் இறந்து கடற்கரையில் கிடந்தன என்று எழுத வேண்டும் 

2. நான் பிரதி வெள்ளிதோறும் நூலகம் செல்வேன். இங்கு பிரதி வெள்ளி, வெள்ளிதோறும் இரண்டும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. ஒவ்வொரு வெள்ளியும் என்று பொருள் எனவே நான் வெள்ளிதோறும் நூலகம் செல்வேன். 
அல்லது
நான் பிரதி வெள்ளி நூலகம் செல்வேன். என்று எழுத வேண்டும்
தொடரும்....

அறிவியல் களஞ்சியம் :

பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிக்கும் நடைமுறை உயிரியல் வழிகளை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படியாகும். பிளாஸ்டிக் கழிவுகளை உடைக்க பூஞ்சைகளைப் பயன்படுத்தும் முறையானது பிளாஸ்டிக் கழிவு நெருக்கடியைக் கையாளுவதில் ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகுந்த அணுகுமுறையாக அமையும். குப்பைத் தொட்டிகள் அல்லது எரியூட்டிகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவைக் குறைக்க இது ஒரு வழியாகும்.

நீதிக்கதை -நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி

ஒரு அழகான நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். அதற்கு அந்த வயதான காவலாளி ஏன் கேட்கிறாய் தம்பி? இந்த ஊரில் வந்து தங்கப் போகிறாயா? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

ஆமாம் பெரியவரே. நான் முன்பு இருந்த ஊர் மிகவும் மோசம். எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு கொள்வார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் தவறாக பேசிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருப்பார்கள். அதனால் எனக்கு எப்பொழுது அந்த ஊரைவிட்டு வருவோம் என்று இருந்தது. அதனால்தான் இந்த ஊர் எப்படி? என்று கேட்டேன் என்றான்.

தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட மிகவும் மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊர் ஏற்றதாக இருக்காது தம்பி என்று கூறி, அந்த வாலிபனை வெளியே வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான். ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் செய்யலாம் என்று இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான்.

பெரியவர் சிரித்துக்கொண்டே, ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார். ஐயா! எனக்கு மூன்று குழந்தைகளே இருக்கின்றார்கள் என்றான். அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வந்திருக்கிறாய்? உங்க ஊரிலேயே வியாபாரம் செய்யலாமே? என்றார் காவலர்.

எங்க ஊர் ரொம்ப நல்ல ஊர். எங்க ஊர் மக்கள் அனைவரும் பாசமாக பழகக்கூடியவர்கள். என் குடும்பம் இப்போழுது மிகுந்த வறுமையில் இருக்கின்றது. நான் இந்த ஊருக்கு என் குடும்பத்தின் வறுமையைப் போக்க வியாபாரம் செய்து சம்பாதிப்பதற்காகத்தான் வந்தேன் என்றான். நான் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு மீண்டும் எங்க ஊருக்கு சென்று விடுவேன் என்று கண் கலங்கியபடியே கூறினான்.

அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் நல்லவர்கள்தான். தைரியமாக நீ இந்த ஊரில் வியாபாரம் செய்யலாம் என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், பெரியவரின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அவரிடம் முதலில் வந்தவரிடம், இந்த ஊர் மிகவும் மோசமானது என்று சொன்னீர்கள். இவரிடம் மட்டும் நல்ல ஊர் என்று சொல்கிறீர்களே ஏன்? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர் இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும் என்றார்.


இன்றைய செய்திகள்

17.02.2026

* தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

* அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்புக்கு 5,023 இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 5,000 இடங்கள் கூடுதலாக 10,023 இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

விளையாட்டுச் செய்திகள்

ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக 16 வெற்றிகளை பெற்றுள்ளது.

*டி20 உலகக் கோப்பை 2026:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.

Today's Headlines 17.02.2026

* Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has said that the final voter list related to the special radical revision carried out in Tamil Nadu will be published on 23.02.2026.

*The central government has approved an additional 10,023 seats in government medical colleges, including 5,023 seats for MBBS and 5,000 seats for postgraduate medical courses.

* The CBSE public examinations for Classes 10 and 12 will begin tomorrow.

SPORTS NEWS

ICC India has won 16 consecutive matches in the World Cup and Champions Trophy.

T20 World Cup 2026: Afghanistan beat the United Arab Emirates by 5 wickets.

Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்துகள்

Blog Archive