கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 23, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-02-2026. திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

23-02-2026. திங்கள் 

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

; இயல்: இல்லறவியல் ;

அதிகாரம் : ஒப்புரவறிதல் ;

குறள் எண்:213.

குறள் :

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.

உரை :

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

பழமொழி :

முயற்சி திருவினையாக்கும். Effort never fails.

இரண்டொழுக்க பண்புகள்:

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

2. எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

* எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இறைவன் நமது பக்கம் இருக்கிறார் என அறிந்து கொள்ளுங்கள் சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு :

01.இந்தியாவில் இருந்து அண்டார்டிகா சென்ற முதல் பெண் விஞ்ஞானிகள் யார்?

சுதிப்தா சென்குப்தா மற்றும் அதிதி பந்த்

Sudipta Sengupta and Aditi Pant

02.சுதந்திர இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவர் யார்?

சர்தார் பல்தேவ் சிங்

Sardar Baldev Singh

English words :

+ Bravely - courageously

Circumnavigate - Sail around

தமிழ் இலக்கணம்:

தேனீர், தேநீர் எது சரி? என்று பார்ப்போம் வாருங்கள்

முதலில் பிரித்து பார்க்க வேண்டும்

தேனீர் = தேன் + நீர் என்று வரும்.

இதன் பொருள் தேன் கலந்த நீர் என்பதாகும்

தேநீர் = தே + நீர் என்று வரும்.

தே என்ற சொல்லுக்கு இனிமை, இறைவன், தேயிலை

என்று மூன்று பொருள் வரும்.

இங்கு தேயிலை கலந்த நீர் தேநீர் என்று வரும். எனவே ' தேநீர் ' தான் சரி .

அறிவியல் களஞ்சியம் :

விஞ்ஞானிகள் கணக்கிட்டபடி, ஒரு நூற்றாண்டுக்கு சராசரியாக 2 மில்லி வினாடிகள் (ஆயிரத்தில் ஒரு வினாடியில் இரண்டு பங்கு) அளவு பூமியின் சுழற்சி மெதுவாகி/குறைந்து கொண்டிருக்கிறது. இதன் பொருள், 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில், அவைகளின் நடமாட்டம் இருந்த காலத்தில், ஒரு நாள் என்பது சுமார் 23 மணி நேரம் ஆகும்.

பிப்ரவரி 23 - சீகன் பால்க் அவர்களின் நினைவுநாள்

- Bartholomäus Ziegenbalg,

பிறப்பு ஜூலை 10, 1682 இறப்பு பெப்ரவரி 23, 1719. இவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. இந்தியாவிற்கு அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதோடு தமிழில் அச்சு எழுத்துகளையும் உருவாக்கினார்.

நீதிக்கதை

அன்பை அடைக்க கதவு உண்டோ?

ஒரு நாள் கடை தெருவின் வழியே ஒரு ஐந்து வயது சிறுவன் தன் மூன்று வயது தங்கையை அழைத்து கொண்டு சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையைப் பார்த்து தயங்கி நின்ற தங்கையைப் பார்த்து, எந்த பொம்மை வேண்டும் என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியைப் பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான்.

அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக்கொண்டே, உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்துவிட்டு, கடைக்காரரைப் பார்த்து இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர், அவனின் கவலையான முகத்தைப் பார்த்துக் கொண்டே, எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று கூறி மீதமுள்ள சிப்பிகளை அந்த சிறுவனிடம் திருப்பிக் கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த, அந்தக் கடையின் வேலையாள் முதலாளியிடம், ஐயா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையைக் கொடுத்து விட்டீர்களே ஐயா, என்றான். அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்குப் பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம்தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும். அதை தடுத்து விட்டேன்.

மேலும் தன் தங்கை கேட்டவற்றைத் தன்னால் வாங்கித் தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றாவது ஒரு நாள் அவன் பெரியவனான பிறகு இந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான் என்றார்.

இன்றைய செய்திகள் 23.02.2026

*வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அடிக்கல் நாட்டினார் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

* டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இருப்பினும் உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிதாக 15 சதவீத வரிவிதித்துள்ளார்.

* எல் சால்வடார் மற்றும் மெக்சிகோ கடற்படைகள் சுமார் 10 டன் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளன.

விளையாட்டுச் செய்திகள்

*டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

Today's Headlines 23.02.2026

The foundation stone for the statue of V. O. Chidambaranar was laid by Vice President C. P. Radhakrishnan.

* The U.S. Supreme Court has canceled the reciprocal tax imposed by Donald Trump. However, Trump has newly imposed a 15% tax on countries around the world.

* The navies of El Salvador and Mexico have seized approximately 10 tons of illegal drugs.

Sports News

In the Super 8 round of the ICC Men's T20 World Cup, England achieved a magnificent victory by defeating Sri Lanka.

Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்துகள்

Blog Archive