பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
24-02-2026. செவ்வாய் .
திருக்குறள் :
பால் : அறத்துப்பால்
; இயல்: இல்லறவியல் ;
அதிகாரம் : ஒப்புரவறிதல் ;
குறள் எண்:215.
குறள்:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
உரை :
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
பழமொழி :
அகம்பாவம் அழிவைத் தரும்.
Pride goes before a fall.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.
2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.
பொன்மொழி :
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.
நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.
சுவாமி விவேகானந்தர்.
பொது அறிவு :
01. அடால்ஃப் ஹிட்லர் பிறந்த நாடு எது?
ஆஸ்திரியா-Austria
02. தமிழ்நாட்டின் முதல் கல் கோவில் (குடைவரைக் கோவில்) எது?
திரிமூர்த்தி கோவில் மண்டகப்பட்டு விழுப்புரம்
Tirumurti Temple Mandagapattu
Villuppuram
English words :
bountiful
abundant.
அபரிதமான அளவு
+ bonanza
a situation which creates a great profit
செல்வச்செழிப்பு
தமிழ் இலக்கணம் :
விலங்குகளின் சரியான ஒலிக்கான வார்த்தை
ஆந்தை - அலறும்
யானை - பிளிறும்
மயில் - அகவும்
குயில் கூவும்
புலி உறுமும்
சிங்கம் கெர்ச்சிக்கும்
அறிவியல் களஞ்சியம்:
பூமி உருவானபோது ஒரு நாளின் நேரம்(6 மணி): பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது, ஒரு நாள் என்பது சுமார் 6 மணி நேரம் மட்டுமே. சந்திரன் மிக நெருக்கமாக இருந்ததாலும், வேகமான கோளின் சுழற்சியாலும், பூமி இன்று இருப்பதைவிட கணிசமாக வேகமாகச் சுழன்றது. பில்லியன்கணக்கான ஆண்டுகளில், சந்திரனில் இருந்து வரும் அலை சக்திகள் படிப்படியாக இந்த சுழற்சியைக் குறைத்தன.
பிப்ரவரி 24 - ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் பிறந்தநாள்
ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- இறப்பு அக்டோபர் 5, 2011)
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.
ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.2011 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் திங்கள் அதிகாலை ஸ்டீவ் ஜொப்ஸ் உயிரிழந்தார்.
நீதிக்கதை
பழைய நிலைமையை மறந்து விடாதே!
முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.
இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.
அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.
அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.
இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.
மந்திரியைப் பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்குத் தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்குப் பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.
நீதி : கேடு நினைப்பவன் கெடுவான்.
இன்றைய செய்திகள்
24.02.2026
*தமிழகத்தில் பனிப்பொழிவு தொடர்ந்து வரும் நிலையில், நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது.
* ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் பெஹ்சுத் மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியாகி உள்ளனர்.
*ஈரானை விட்டு வெளியேறுங்கள்.இந்தியர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.
விளையாட்டுச் செய்திகள்
* டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Today's Headlines - 24.02.2026
* As cold weather continues in Tamil Nadu, the spread of the lung infection called pneumonia has increased.
* In Afghanistan, 17 members of the same family were killed in an attack carried out by Pakistani warplanes in the Behsood district.
* "Leave Iran." The central government has strongly urged Indians.
Sports News
In the Super 8 round of the T20 World Cup series, the Indian team faced the South African team yesterday. In this match, the Indian team lost by a margin of 76 runs.
Prepared by
Covai women ICT_போதிமரம்
