கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 13, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நால்வகைக் குறுக்கங்கள், திருக்குறள் ஜூலை 20 - 2026

7th tamil model notes of lesson

lesson plan 2026 july 20

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

20-07-2026 முதல் 24-07-2026

2.பருவம்

1

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

அணிநிழல் காடு - கற்கண்டு, வாழ்வியல்

5.உட்பாடத்தலைப்பு

நால்வகைக் குறுக்கங்கள், திருக்குறள்

6.பக்கஎண்

39-46

7.கற்றல் விளைவுகள்

T-714 – படிக்கும்போது வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் பாடப்பொருள்களைப் புரிந்துகொள்வதுடன், அகராதிகள், பார்வை நூல்கள், வரைபடங்கள், இணையத்தளம் அல்லது பொருள்கள் ஆகியவற்றின் துணைகொண்டு பொருண்மையைத் தெளிவாக அறிதல்.

8.திறன்கள்

எழுத்துகள் குறுகி ஒலிக்கும் இடங்களை அறிந்து பயன்படுத்தும் திறன்

திருக்குறள் கருத்துகளை அறியும் திறன்

9.நுண்திறன்கள்

ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் குறித்து உணரும் திறன்.

பெருமைமிக்க திருக்குறளின் அறக்கருத்துகளை உணரும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/06/7th-tamil-ilakkanam-naalvakai-kurukkam.html 

https://tamilthugal.blogspot.com/2020/06/7-1-2-tamil-ilakanam-naalvakai.html 

https://tamilthugal.blogspot.com/2021/07/2-nalvakai-kurukankal-7th-q.html 

https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video_65.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/2-1-7th-tamil-thirukural-kuruvina-vidai.html 

11.ஆயத்தப்படுத்துதல்

சார்பெழுத்துகளின் வகைகளைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த திருக்குறள்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

மாத்திரை அளவுகள், சார்பெழுத்துகளைக் கூறி குறுக்கங்களை அறிமுகப்படுத்துதல்.

திருவள்ளுவர் குறித்த குறிப்புகளைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசிரியர் நால்வகைக் குறுக்கங்களையும் எடுத்துக்காட்டுகளுடன் கூறி மாணவர்களுக்கு விளக்குதல். மாத்திரை அளவுகளை ஒலித்து உணரச்செய்தல்.

          திருக்குறள்களை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், திருக்குறளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

நால்வகைக் குறுக்கங்களை அறியச் செய்தல். எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவுகளை அறிதல். திருக்குறளை வாழ்வியலோடு பொருத்தி உணரச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – நெடில் எழுத்துகள் பெறும் மாத்திரை ..............................

                   திருக்குறளை இயற்றியவர் ....................................

          ந.சி.வி – ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?

                   வாழும் நெறி யாது?

          உ.சி.வி – ஔகாரம் முதலில் இடம்பெறும் சொற்களை எழுதுக.

                   புறங்கூறாமை குறித்து உனது கருத்துகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

ஐகாரக்குறுக்கம் இடம்பெறும் சொற்களைத் திரட்டுக.

திருவள்ளுவர் குறித்த தகவல்களையும் திருக்குறளின் பெருமைகளையும் இணையம் மூலம் அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive