தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்
முன்னுரை
இந்திய அரசியலில் இலக்கிய ஆற்றல், அரசியல் பார்வை மற்றும் சமூக தொண்டு ஆகியவை வெற்றிகரமாக
ஒருங்கிணைந்த ஒரு சில தலைவர்களுள் முத்தமிழறிஞர் கருணாநிதியும் ஒருவர். தமிழ் இலக்கிய
வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம். தமிழ்த்துகள்
நாடக அரங்கேற்றம்
15 வயதில் எழுதிய ‘பழனியப்பன்’ என்கிற நாடகமே கலைஞரின் முதல்
நாடகம். திருவாரூரில் அந்த நாடகத்தை அவர் அரங்கேற்றம் செய்தார். பின்னர் அது நச்சுக்கோப்பை
என்கிற தலைப்பில் தமிழகம் எங்கும் திராவிடர் கழக மேடைகளில் நடத்தப்பட்டது. மொத்தம்
17 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார்.
ஒவ்வொரு நாடகத்தையும் திரைக்கதையின் வடிவத்தில் அவர் எழுதியிருந்தார். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள்,
இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள்,
கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
மொழிபெயர்ப்பு
கருணாநிதி எழுதியுள்ள 536 நூல்களில், 12 நூல்களைத் தேர்வு செய்த கோவை பாரதியார் பல்கலைக்கழகம்
அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளது. தொல்காப்பிய பூங்கா, காலப்பேழையும் கவிதை
சாவியும், கவிதை மழை 3 தொகுதிகள், தென்பாண்டி சிங்கம், பாயும் புலி பண்டாரக
வன்னியன், பொன்னர் சங்கர், முத்துக்குளியல், பராசக்தி மற்றும்
மனோகரா, பூம்புகார் மற்றும்
ஓரங்க நாடகங்கள், கலைஞரின் சிறுகதைகள் ஆகிய 12 புத்தகங்கள் ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ்த்துகள்
தொல்காப்பிய பூங்கா
கலைஞரின் உரைநடையிலும் கவித்துவம் காணப்படும். அவருடைய கவிதைகளில் தமிழ் மொழியில்
அவருக்குள்ள ஆளுமை வெளிப்படுகிறது. கருணாநிதியின் மொழி, இலக்கிய கொள்கைகள்
அவருடைய தொல்காப்பிய பூங்காவில் காணப்படுகின்றன. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள்,
இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள்,
கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
இலக்கியச் சுவடுகள்
இடையறாத அரசியல் பணிகளுக்கு மத்தியிலும், எழுத்துப் பணியை தொடர்ந்தவர் கருணாநிதி. 10 நாவல்கள், 24 நாடகங்கள், 4 வரலாற்று புனைவுகள், 9 கவிதை நூல்கள், 39 சிறுகதைகள், தன் வரலாறு என்று
ஏராளமாக எழுதினார். 75 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். தமிழ்த்துகள்
கடிதமும் கலைஞரும்
தொண்டர்களுக்கு ‘உடன்பிறப்பே’ என்ற தலைப்பில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதி உள்ளார். முரசொலியில் அவர்
எழுதிய உடன்பிறப்புக்குக் கடிதம், உலக அளவில் நீண்ட காலமாக வெளிவரும் தொடர்களில் ஒன்றாகக்
கருதப்பட்டது. தூக்குமேடை நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா, கருணாநிதிக்கு அளித்த
கலைஞர் என்ற பட்டம் இந்நாள் வரைக்கும் அவரது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது. தமிழ்த்துகள்
திரை இலக்கியம்
1947-ம் ஆண்டு வெளியான 'ராஜகுமாரி' திரைப்படம்தான், கலைஞர் முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம். எம்.ஜி.ஆர்
நாயகன் வேடம் ஏற்று நடித்த முதல் திரைப்படமும் ‘ராஜகுமாரி’தான். கலைஞர் படைப்புகளும் இதே திசையில் புதிய கருத்துகளைக்
காட்டின. முற்போக்கு உலகு நோக்கி அழைத்துச் செல்வதை நோக்கமாக்க கொண்டிருந்தன. தமிழ்த்துகள்
புரட்சி இலக்கியம், முற்போக்குப் பார்வை, கார்க்கி என்பனவற்றை அறியாத எளிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும், கலைஞரின் முயற்சி
எளிமை சார்ந்து இருப்பதில் வியப்பில்லை. முயற்சியை எளிமையாக்கிப் பார்த்து எள்ளும்
பார்வையே வியப்பாய் இருக்கிறது. கலைஞரின் எழுத்துகளில் மடைதிறந்த வெள்ளமாய்ச் சொற்கள்
பாய்ந்து வந்துவிழும்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள்,
இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள்,
கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
கவிதைகள்
கருணாநிதி கவிதைகள் இயற்றியதுடன், கவியரங்கங்களுக்கும் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அறிஞர்
அண்ணா மறைந்தபோது, "பூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்'- அன்பு உள்ளம் அரவணைக்கும்
அன்னை உள்ளம்” எனத் தொடங்கும் கலைஞர் பாடிய இரங்கற்பா, தமிழ் இலக்கிய வரலாற்றில்
சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.
முடிவுரை
சிலப்பதிகாரத்தைத் தழுவி அழுத்தம் திருத்தமாக அவர் எழுதிக் கொடுத்த கதையுடன் அமைந்த
படமே ‘பூம்புகார்’. காப்பியக் கதையென்றாலும் முதன்முறையாக நாயகிக்கென்று அழுத்தமான
வசனங்கள் இந்தப் படத்தில் கலைஞரால் எழுதப்பட்டது. 1974-ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசில் “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலித் திட்ட இயக்ககத்தை“ நிறுவினார். இவ்வாறு இலக்கிய உலகுக்குத் தன் சுவடுகளை
விட்டுச் சென்றவர் கலைஞர்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள்,
இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள்,
கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்